வாழ்வில் இடைவெளி

பெண்ணவள் கைவளையளுக்கும்
கைகளுக்கும் இடைவெளியுண்டு
அந்த இடைவெளியில் வருவது அழகிய
வளையல்ஓசை
அவள் விரலில் அணிந்த மோதிரத்திற்கும்
விரலுக்கும் இடைவெளியுண்டுஅது
தருவது விரலுக்கும் அழகு
வாழ்விற்கும் இடைவெளி அவசியம்
இடைவெளி இல்லையேல் நெருக்கடி

காத்தலுக்கும் இடைவெளி தேவை ஆம்
காதலிரிடையே, அதுதான் தன்னடக்கம்
அடக்கமில்லா காதல் வெறும் மோகமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வசுத (16-Jul-18, 11:15 am)
Tanglish : vaazhvil idaiveli
பார்வை : 82

மேலே