இப்படியும் வந்தமைந்தது ஓர் காதல்

அவளென்ன இன்றைய உலகின்
பெண்ணா இல்லை யார்தான் இவள்
என்று எண்ணவைத்தது முதற்கண்
அவள் தோற்றம்- பளிச்சிடும்
மஞ்சள் பூசிய முகம்
பொட்டிட்ட நெற்றி
வாரிபின்னிய கூந்தல்
அதில் சூட்டிய ரோசாப்பூ
தழைய தழைய உடலைச்சுற்றி
அங்கங்களை அங்கங்கு
மூடிமறைத்து , ஆடையுடுத்திய அவள்,
சிலைபோல கண்முன் நின்றாள்
அந்த வண்ணமகள் -அவள்கைகளில்
ஏந்தியது புத்தகங்கள், அவள் கல்லூரி மாணவியோ?
கைப்பேசி ஏதுமில்லை
என்னைப் பார்த்தாள், புன்னகைத்தாள்;
அவள் பார்வையும் புன்னகையும்
என்னை ஓர் பெரிய அலைபோல்
அவள் மனதில் அடித்துக்கொண்டு போக
நாளை இவளுடன் நான் பேசுவது எப்படி
இவளிடமோ கைப்பேசி இல்லை
இவள் யார், எந்த ஊர் என்பதும்
எனக்கு தெரியாதே என்று
மண்டையைக் குடைந்து நிற்க
அந்த சிறுவன் என் கையில் ஓர்
கடிதம் தந்து ஓடிவிட்டான்
அதை நான் வாங்கி படிக்கையில்
புரிந்தது அது அவள் எழுதிய கடிதம்.....
முத்துமுத்தாய் தன் கைப்பட
செந்தமிழில் அவள் எழுதிய முதல்
வரிகள்...."..வணக்கம்....நான்
உன்னை நேசிக்க விழைகின்றேன்,
உனக்கு இதில் ஏதும் பிரச்சனை இல்லை
என்றால்; சரி என்றால் கைப்பட பதில்
எழுதி அனுப்பவும் அதோ எதிரே காத்திருக்கிறான்
அந்த சிறுவன்-நம் உறவென்று ஒன்று வளர
கடிதங்கள் சாட்சியாய் இருந்திட வேண்டும்
கைப்பேசி ஏதும் வேண்டாம், அதில் விருப்பம்
எனக்கில்லை என்று முடித்திருந்தாள்............

எழுதி பழக்கம் இல்லா என் கைகளுக்கு
அழகாய் எழுத தெரியவில்லை.....ஆனால்
எழுத எழுத பழகிடுமென்று நினைத்து
இதோ அவளுக்கு எழுத துவங்கிவிட்டேன்
நானும் தமிழில்..............
........என்னவளே, நன்றி கடிதத்திற்கு,
உன்னை நேசிக்க இன்னும் நேரம் தேவை இல்லை
இதோ இந்த கடிதமே இதற்கு முதல் சாட்சி
நம் காதல் தொடரட்டும் கடிதங்கள் மூலமாய்
நம் உள்ளங்கள் சேர்ந்திடட்டும் ............பின்னர்
சேர்ந்து நாம் பேசலாம், பாடலாம், ஆடலாம்
கைபேசி தேவை இல்லைதான்.....


இப்படி பார்வையில் வந்து, கடிதங்களில்
தொடர்ந்த எங்கள் காதல் யாத்திரை
இன்று கடற்கரை மணலில் நானும் அவளும்
அமர்ந்து மனம் திறந்து பேச வழிகாட்டியது........

தொடரும் எங்கள் பயணம்..............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (16-Jul-18, 5:00 pm)
பார்வை : 119

மேலே