அந்நாள்💛❤
அன்று
வியப்புடனும்
ஒரு வித பயத்துடனும்
விடிந்தது அந்நாளின்
அதிகாலை.....
காரணம்
உன்னை காதலோடு
முதல் முறை காணப்போகிறேன்
என்பதால்....
விடிந்தது இரவு
கனவில் வந்த உன்னை
நேரில் காணப் போகிறேன்
என்ற பேராவலோடு.....
மறந்தேன் ஏனோ
அன்று மட்டும்
பல் துளக்கும் போது
டூத் பேஸ்ட்டை ...
குளிக்கும் போது
உடல் சோப்பை...
உண்டேன்
தொண்டைக்கும் இறங்காமல்
வயிற்றுக்கும் சேராமல்....
தவித்தேன்
நேரம் இருந்தும்
அவசரமாக அவசரமாக
கடிகாரத்தை மிஞ்ச தவித்தேன்....
நடந்தேன்
பேருந்தை நோக்கி நடந்தேன்
கால்கள் ஏனோ தரையில் இல்லை
அன்று.......
ஜென்னலோரம்
ஜென்னலோரம்
அமர்ந்து காற்றோடும்
காதில் பாட்டோடும்
நெஞ்சில் உன்
நினைவோடும்
உறவாடினேன்.....
அவ்வப்போது
உன்னை பார்த்ததும்
அணைப்பதா
இல்லை
பார்த்தவுடன்
அணைப்பதா
என பல எண்ணங்கள்
மட்டும் அவ்வப்போது
என் நினைவைத் தட்டிக்
கொண்டிருந்தன...
சேர்ந்தேன்
உன்னை காணும்
இடத்தை வந்து
சேர்ந்தேன்
ஆனால் உன்னை
காணவில்லை.....
நின்றேன்
வழி பார்த்து
நின்றேன்
அந்த வழி கூட
நான் வச்ச கண்
வாங்காமல் பார்த்ததில்
வெட்கத்தில்
நெளிந்தது....
கடந்தது
கடந்தது கடந்தது
நேரம் கடந்தது......
கண்டேன்
தூரத்தில் உன்னை
கண்டேன் .......நீ
அங்கிருந்தே
இங்கிருந்த
என்னை தூக்கி போட்டது
போன்று இருந்தது.....
அசையாது
என் கண் இமை அசையாது
பார்வையும் ஆடாது
பார்த்தேன் அன்னமே
உன் அன்னநடையை....
கண்டோம்
நீ என்னை கண்டாய்
நான் உன்னை கண்டேன்
நாம் கண்டு கொண்ட
நேரத்தில்
நம் காதலை கண்டோம்....
நிற்க்குமா!
நிற்க்குமா என்
கால்கள் உன்னை
கண்ட பிறகு......
நீயும்
என்னை போலவே
நீயும் என்னை
நோக்கி ஓடி வந்தாய்
அணைத்தேன்
அணைத்தேன் உன்னை
பார்வையால் கொஞ்சம்
கைகளால் கொஞ்சம்
அசைந்தோம்
ஒன்றிரண்டு நாழிகை
ஆரத்தழுவ காற்றில்
அசைந்தோம்.....
காதல் நேரம்
பிறகு என்ன
கனவு பளித்தது
உன் கைகளோடு
என் கைகளை
கோர்த்துக் கொண்டேன்
உன் கண்ணில்
என்னை கண்டுகொண்டேன்...
கதை களித்தோம்
வாய் திறந்து சில நேரம்
விழி திறந்து சில நேரம்...
அப்பொழுதும்
அருகருகே இருந்தும்
அப்பொழுதும் இன்னும்
நெருக்கம் கேட்டது
நெஞ்சம்
மெல்ல
நீ மண் தீண்ட
முட்டியிட்டு
மெல்ல வாய்
திறந்து
சொல்லி முடித்தாய்
முத்தான காதலை....
இல்லை
அந்நேரம் நான்
உணர்ந்த ஒன்றை
வர்ணிக்க வார்த்தை
இல்லை.....
மறந்து
என் முன்னே
முட்டியிட்ட
உன்னை கவ்வி
தூக்கி நிறுத்தினேன்
கையோடு அள்ளி
நேஞ்சோடு உன்னை
அணைத்துக் கொண்டேன்
நீ என்னிடம் நீட்டிய மலரையும்
கையில் வாங்க மறந்து...
இனித்தது
நீ கொடுத்த பூ புதுவித
வாசத்தை வீசியது
நீ கொடுத்த சாக்லேட்டை நான்
அப்போது சுவைக்கவில்லை
ஆனாலும் இனித்தது
அந்நேரம்.....
அந்நாள்
எதிர்ப்பாராத
சில முத்தங்கள்
உதடு ஒட்டா
வார்த்தைகள்
கண்கள் எழுதிய
காதல் கவிதை
மழலை மொழி
காதல் மழை
அந்நாள் ஆனந்த
ஆழ்கடலில் மூழ்கி
முத்தெடுத்தது போல்
இருந்தது......
நினைவில்
அந்நாள் இன்று
என் நினைவில்.....!!!
என்றென்றும் என்
நினைவில் அந்நாள் மட்டும்
நீங்காத நினைவாய்......!!!!