தாழ்திறவாய் மனமே

தாழ்திறவாய் மனமே

நச்சுத்தன்மை நீங்கவே அன்பென்ற சிவம் மனதில் குடியேற வேண்டும்,
குறுக்கே நிற்காதே மனமே,
தாள் திறவாய் மனமே,
அளவிற்குட்படாத அன்பால் நீ நிறைந்தால் உன்னை போன்ற மனங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திட அம்மகிழ்ச்சி கண்டே நீ மகிழ்வாய் மனமே.

பேரன்பு உன் கதவு தட்டும் சத்தம் கேட்கவில்லையா மனமே?,
உண்மை ஞானம் உயிர்த்தெழவே மனமே ஆனந்தக்காற்றை நீ சுவாசிக்கவே மனமே திறந்திரு,
அகிலமெங்கும் விரிந்திரு மனமே,
சிந்தனை சிறகை விரித்திரு மனமே.

பிறர் கண்ணீர் துடைக்கவே உன் கைகளை நீட்டிடு மனமே,
தயங்காதே,
அன்பென்ற தீயினால் புத்துயிரும் புத்துணர்வும் நீ பெறுவாய் மனமே,
கத்தி கதறி அழுவதைவிட்டு எழுந்து நடைபோடு மனமே,
நீசத்தனம் நீங்கிடவே அன்பென்னும் அருமருந்து உன் மனதிலே நிரம்பி வழியவே தடையாய் நிற்காதே மனமே.

மனம் சரியானால் மனசாட்சி விழிப்படையும் மனமே,
மனசாட்சி விழித்துவிட்டால் எழுதி வைத்து சட்டம் தேவையற்றது மனமே,
நீதிமன்ற நாட வேண்டிய அவசியமில்லை மனமே,
உரிமை இல்லாதது மீது உரிமை பிறவாது மனமே,
மனமே நீ சுதந்திரமடைய அன்பென்ற இறைவனை துணை வேண்டும்,
வாழ்க்கை எங்கும் செழிப்பாய் ஆனந்தமாய் அன்பென்ற இறைவழி வாழ வேண்டும் மனமே,
அன்பை சந்தேகித்தால் நீ நிறைவடையாய்..

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Jul-18, 9:00 pm)
பார்வை : 1575

மேலே