தூக்கிலிடப்பட்ட நீதி

தூக்கிலப்பட்ட நீதிக்கு
வழக்கொன்று தொடுக்கப்பட,
நீதியரசர்கள் தராசினை
காட்சிப் பிழையாக்குகிறார்கள் நிதிக்கோட்டையில்,

நீதியே தராசில்
இல்லையென்று தான்
சொல்ல வேண்டியுள்ளது,
ஏனென்றால் இங்கே
மனிதத் தரத்தின்
நிலைகொண்டு
நீதிப் பின்புறமாக
ஏலம் விடப்படுகிறது
அரசரின் கைக்கூலிகளால்,

அளவீட்டுச் சமன் கணக்கிட முள்ளேதுமில்லை,
ஆனாலும் பேச்சு வழக்கில்
நீதி அளவிடப்படும்
அராஜகத்தின் உதவிகொண்டு,

எடை கற்களுக்கீடாக
எல்லோரிடமும் கனம் இருந்தால் தராசின் நடுமுள் நின்று,
சட்டக்கதவை பூட்டியும்
சாட்சியம் சொல்லும்
உண்மைக்கு புறம்பாக,
இல்லையென்றால் நடுமுள் ஆடிக்கொண்டே இருக்கும்
எடை கற்களுக்கு ஈடான
எடையை ஏங்கி,

படித்த மேதைகளே நீதியின்
திறைமறைவிலொழிந்து
தராசின் நடுமுள்ளாகிறார்கள்,
நம் காமராசர்களுக்கு
அம்பேத்காரை எங்கு தட்டவேண்டுமென்று
தெரிவதில்லை,

தெரிந்தாலும்
என்ன பயனென்றே
நினைக்கத் தோன்றும் நமக்கு,
ஏனென்றால் நம்மிடம் தான்
கனம் இல்லையே,

தெரிந்து கொள்ளுங்கள் ஊமையர்களே,
சட்டத்தின் நடுமுள் உத்திரத்தில் ஏழைகளுக்காக சுருள் வடிவில் இலவசமாக உயிரேங்கி ஊசலாடுகிறதென்று,

நீதியின் கோட்பாடுகளுக்கும் வரையறைக்கும்
பேசும்பிள்ளை நிதிமலமே,
இங்கே நாமெல்லாம் குரல்வளை நெறித்து கூண்டுக்குள்ளே
அரிப்புக்கு கீறப்படும் கிளிகள்,

அயோக்கிய அரசர்களே
திறக்காத சட்டத்தின் கதவுகளில்
எழுதி வையுங்கள்,
அம்பேத்கார் இறந்துவிட்டார்,
சட்டம் வேசியாக விற்கப்படுகிறதென்றும்,
சாட்சிக் கூண்டில்
நிற்க நிதித்தகுதி
வேண்டுமென்றும்.

எழுதியவர் : தமிழினியன் (18-Jul-18, 9:20 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 1782

மேலே