அழுத்தமொரு கொடிய மிருகம்

#அழுத்தமொரு_கொடிய_மிருகம்

சுற்றம் மற்றும் நட்பின்
வேரறுக்க
கொடியமிருகமொன்று
ஒவ்வொரு உயிருக்குள்ளும்
உறங்கிக் கொண்டிருக்கிறது,

தட்டியெழுப்பும் நிகழ்வுகள்
நெஞ்சங்களைக்
காயப்படுத்துமெனில்,
மனஅழுத்தம் குடிகொண்டு
சுற்றம் மற்றும் நட்பின் வேர்
அன்பெனும் பிடியிலிருந்து
அறுந்து தொங்கும்,
அன்பே ஆதிதாளத்திற்கு
பறந்து விரிந்த வேர்கள்,
வேர்கள் வெட்டப்படின்
அழுத்தத்தின் பிடியில்
அகிலமும் அன்பேங்கி
சிக்கித்தவிக்கும்,
அன்பில்லா வாழ்க்கை!!
கடலுக்கடியில்
சிதறிக்கிடக்கும்
உடைந்த
கண்ணாடித் துண்டுகளை
தேடிச்சேர்த்து
உருவம் பார்க்க முற்படும்
செயலில் தொலைந்து போகும்,
அன்பு செலுத்துங்கள்
அகிலத்தில் தனித்துவமாக
அறத்தை நிலை நிறுத்துங்கள்,
அன்புசெலுத்த மறந்து
மனஅழுத்தத்தை புகுத்தி
உடலை உயிரற்று
தூக்குமேடையில்
தூக்கி நிறுத்தாதீர்கள்.

எழுதியவர் : தமிழினியன் (18-Jul-18, 9:15 pm)
சேர்த்தது : தமிழினியன்
பார்வை : 1594

மேலே