இன்றய நாகரிக காதல் 555

பெண்ணே...

உனக்காக உயிர் சுமந்து
உன்னையே சுற்றிவந்தேன்...

நீ மட்டும் அழகி என்று
என் வாழ்க்கைக்கு...

காதல் சொன்ன எனக்கு சிலமாத
காத்திருப்புக்கு பின் சம்மதம் சொன்னாய்...

காதல் பரிசுயென சில விலை உயர்ந்த
பொருட்கள் என்னிடம் கேட்டாய்...

பொழுது போக்கிற்காக
சுற்றும் வாலிபர்களை போல...

என்னையும் நீ
நினைத்தாயோ பெண்ணே...

உன்னை சுமந்த என் இதயம்
உனக்கும் எப்போதும் புரியவில்லையா...

என் வாழ்க்கை ராணி
நீயென நினைத்தேன்...

நீயோ என்னை ஒரு
இயந்திரமாக நினைத்துவிட்டாய்...

உன்னை சுமந்த
என்னிடம்...

பணமும் பொருளையும் பரிசாக
பெற்றுக்கொண்டாய்...

என் இதயத்தை மட்டும்
நேசிக்க மறுத்துவிட்டாய்...

என் காதல் வார்த்தைகள்
உன் இதயத்தை தட்டி
எழுப்பவில்லையோ கண்ணே...

உன்னை மட்டும் நினைத்த என்னை
நீ பைத்தியம் என்கிறாய்...

இன்று உணர்ந்தேனடி நான்
உன்னையும் என்னையும்...

ஆம் நான் நாகரிக காதலின்
பைத்தியம்தான் உன்னால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Jul-18, 4:32 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 915

மேலே