ஏர்பூட்டும் இனத்தவன் -

கார்முகில் கசிந்திடும்
கண்ணீரில் வாழ்ந்தவர்
பார்முகம் மலர்ந்திடும்
பசுமையை வளர்த்திடும்
ஆர்வலர், அழுகையை
அறிந்தவர் யாருண்டு?

நிலமுண்டு நீரில்லை
குலமுண்டு சோறில்லை
வளமென்று ஏதுமில்லை
இருப்பினும் இவனோ
பசித்தவன் புசித்திட
இராப்பகலாய் உழைத்தவன்...

பசுமை,
வளர்த்திட நினைத்தவன்
வாழ்கையைத் தொடர்ந்திட
வழியென வகுத்திட
வந்தவன் அவனோ!
கல்லில் கண்டிடும்
கடவுள் போலவன்
கண்முடிப் போகிறான்...

ஆளும் முன் அசைந்தவன்
ஆளுகையில் அசந்தவன்
அயல்நாடு புகுகிறான்
காலமது மாறுமென
நாளும் கனா கண்டவரும்
கற்சிலை போலுமொரு
வாழ்வியல் காணுகிறான்....

வாழும் சந்ததி
வீழும் ஓர்தேதி
வருமென நினைத்தவன்
கருவினை கலைத்தவன்
மானிடம் அழியும்
ஓர்செயல் செய்கிறான்.....

நான்,
யாரிடம் சொல்லிட
வாய்மூடி வாழ்கிறேன்
ஏர்பூட்டும் இனத்தவன்
கயிற்றின் முனையில்
கல்லறை காண்கிறேன்......

--கல்லறை செல்வன்

எழுதியவர் : கல்லறை செல்வன் (19-Jul-18, 11:30 pm)
பார்வை : 1357
மேலே