பூமியின் பாரம் ,யார் தாங்குவார்
வழிப்போக்கனுக்கு சுமை இறக்க
சுமைதாங்கி
என் சுமைத்தாங்க யாருமில்லையே
சொன்னது பூமி., சொல்லி
சற்றே தோள்களை அசைக்க
பூகம்பமானது மண்ணில்
பூமியின் பாரம் அப்போது
உணர்ந்தார் மனிதர்.