எண்ணங்களின் ஆரோக்கியங்கள்
அழுவதால் சாய்வதில்லை மனம்
கண்ணீரால் கழுவப்படுகிறது
தொழுவதால் தோற்பதில்லை உள்ளம்
நிம்மதியால் நிறைகின்றது
வீழ்வதால் சோர்வதில்லை மனிதன்
மீளும் பயிற்சி கொள்கின்றான்
எழுவதால் உயர்ந்து நிற்பதற்கு மனிதன்
எழுச்சி காண்கின்றான்
ஆள்வதால் அகந்தை கொள்கின்றவன்
தாழும் ஆழம் அளக்க தொடங்குகிறான்
நாளும் பிறர் நலம் நாடுபவன்
வாழும் உள்ளங்களில் சிறந்து நிற்பான்
உழலும் உள்ளங்களை உற்றுப் பார்ப்பவன்
தளரா தேற்றும்நெஞ்சம் கொள்கின்றான்
வாழும் வழி வேண்டி வாசல் வருவோரின்
சூழும் களையகற்றி சுகம் தரும் மனிதன் எவனோ
ஆள போகும் மன்னன் அகிலத்தில் அவனே
இவையே மனித எண்ணங்களின் ஆரோக்கியங்களாம்