களவாணி

களவாணி ஒருவன்
ஜவுளிக்கடைக்குள்
நடு சாமத்திலே...

விலை உயர்ந்த
அழகழகான ஆடைகள்
கண்ணைகவரும்
வண்ணத்திலே...

எதை எடுப்பது
எதை விடுவது
ஏராளமான வகைகள்...

தன் ஆசை மகளுக்கு
சிலவற்றை எடுத்தான்
தன் மகனுக்கும்
ஒரு சில ஆடைகள்
தனக்கென்று
சிலவற்றை
அள்ளிக்கொண்டான்
தன்னோட
அப்பனுக்கு ஆத்தாளுக்கும்
மறக்காம சிலவற்றை
எடுத்து வைத்துக்கொண்டான்...

தன் மனைவிக்கு
ஆழகான சேலைகள்
எடுத்து தனி மூட்டை கட்டினான்

வெளியில் வரும்போது
அவன் கண்ணில் பட்டது
அந்த மாம்பழ வண்ண
காஞ்சிபுர பட்டுச்சேலை
தன் மனைவியோட
நீண்டநாள் ஆசை
அந்த பட்டுச்சேலை...

அதை பார்த்தும்
எடுக்க மனமில்லாமல்
திரும்பி திரும்பி பார்த்து
பெருமூச்சுடன்
வெளியே வந்தான்
ஜவுளிக்கடை பொம்மையை
நிர்வாணமாக்க மனமில்லாமல்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Jul-18, 9:58 am)
பார்வை : 599

மேலே