பாடு

பொன்னானப் பொழுதைப் புண்ணாக்கி விட்டுப்
=புலம்பித் திரிந்து புகையாதே! வாழ்வு
=என்னானா வென்று இருகின்ற யார்க்கும்
=ஏமாற் றமொன்றே எந்நாளும் மிஞ்சும்.
உன்னாலே யாகும் உழைப்பொன்றை செய்நீ
=உயர்ந்து விடலாம். உலகத்தார் முன்னே
தன்னாலே ஓங்கும் தன்மான மடைந்தே
=தன்னானா தன்னானே தானாநீ பாடு
௦௦௦௦

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Jul-18, 10:12 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 53

மேலே