அந்நாளே திருநாள்
ஒருவர் மட்டும் இனிப்பிலே
ஊரோ ரெல்லாம் கசப்பிலே
தவறு செய்வோர் மகிழ்விலே
நேர்மை யானோர் இகழ்விலே
பசிப் பிணியும் விலகலே
நோய் நொடியும் அகலலே
சாதிப் பேச்சு சகிக்கலே
மதச் சாயம் கலங்கலே
ஊழல் வெற்றி நடையிலே
லஞ்சம் அழியா வழியிலே
போதை இன்னும் இறங்கலே
வாதை வரதட்சணை உறங்கலே
காட்டின் அழிப்பில் முடிவில்லே
நாட்டின் சிதைப்பில் தயங்கலே
ஓட்டின் மதிப்பு விளங்கலே
வீட்டில் ஒற்றுமை நிலைக்கலே
சிறைக்கு செல்வோனும் திருந்தலே
குற்றம் இதுவரை குறையலே
விதைத்த நல்வார்த்தை வளரலே
வளர்த்த கலாச்சாரம் மறைவிலே
எல்லாம் சரியாக மாறணும்
மகிழ்ச்சி எல்லோரிலும் வாழணும்
விரைந்து வரட்டுமே அந்நாளே
அந்நாளே நம்வாழ்வில் திருநாளே

