விடியலை நோக்கி இரவுகள்

நிசப்தமான இரவு நேரம்
யாரும் இல்லாத இல்லத்தில்
என் மூச்சுக்காற்று மட்டும்
அங்கும் இங்கும் மோதிக்கொண்டு
விளையாடுகிறது ....

எண்ணங்கள் பல விதமாய்
மாறி மாறி
கண்ணாமூச்சி ஆடுகிறது
என்னுடனும் ,
என் வாழ்க்கையுடனும் ...

புலம்பித் தள்ள யாரும்
சிக்கியப்பாடும் இல்லை ;
தன்னம்பிக்கை தர
உண்மையான மனமும்
அருகில் இல்லை ....

கதையாவது படிக்கலாம் என்று
தொடங்கினால் ,
பதிலற்றக் கேள்விகளுடன்
குழப்பத்தில் நான் இருக்க
ஒரு வரிக்கூட படிக்காமல்
புத்தகத்தை மூடியது கைகள் ....

அவ்வப்போது கைப்பேசி அனுமதியுடன்
வரும் குறுஞ்செய்தி
உன்னுடன் பேச யாரோ நினைக்கிறார்
என நினைவுபடுத்துகிறது ....

ஏதேதோ நினைத்துக்கொண்டு இருக்க
நான் போகிறேன் என
நேரமும் போகிறது ...

நீ விழித்துக்கொண்டு
நினைத்ததெல்லாம் போதும்
இனி என்னால் உன்னுடன்
விழிக்கமுடியாது என
கண்களும் இமைக்கதவை மூட போகிறது ...

என் எண்ணங்கள் என்ன
செய்கிறதோ ? தெரியவில்லை ;
இரு வருகிறேன் என
நானும் போகிறேன் ...

என்றோ விடியும் விடியலுக்கு
தினமும் காத்துக்கொண்டு இருக்கிறேன் ...
என்று வருகை தரப்போகிறதோ ?

எழுதியவர் : Deepikasukkiriappan (21-Jul-18, 11:27 am)
பார்வை : 238

மேலே