துயரணுகாது

காது கொடுத்திந்தக் காசினி மாந்தரின்
தீதனைத்துங் கேட்டுத் துடிக்காது – யாதுமற்று
வாழப் பழகும் வரம்பெற்று விட்டாலோ
பாழுந் துயரணு காது

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (21-Jul-18, 10:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 58

மேலே