பேயாக விழித்திருக்கிறேன்

தொலையாத கனவு ஒன்று தூக்கத்திலும் துரத்துகிறது.
நிம்மதியாக தூங்கி நெடுநாட்களாயிற்று.
கண்களை முடினால் சுற்றிலும் மனித பேய்கள்.
கழுத்தைப் பிடித்து இறுக்குவதாய் உணர்கிறேன்.

உன் இரத்தமே எங்கள் பசி தீர்க்குமென்றே அவை கூச்சல் போட,
விஷப் பாம்புகள் உடலெங்கும் முத்தமிடத் துடிக்கின்றன.
கோரமான அவை நெருங்கவே நான் அனுமதிக்க விரும்பில்லை.
மனம் நடுக்குற்று வேண்டாம், தூங்காதே.
இவ்விடம் பாதுகாப்பானது அல்ல என்று அறிவிக்கிறது.

மனமே பயப்படுகிறாயா?
என்றே நானும் அதட்ட,
பயமில்லை,
மனித பயங்கரத்தை எடுத்துச் சொன்னேன், என்கிறது.
விஷமமான உலகந்தான் கடுமைகளைக் கடமையாக, தீமைகளை தேன்சுவையாக உண்டு பெருத்து இருக்கிறார்கள்.
இதனால் முன்னெச்சரிக்கையோடு நடமாடுவது நம் கடமையே என்று தீர்மானம் கொண்டே தூக்கம் தின்றேன்.

முன்னெச்சரிக்கை உணர்வு பயமென்றால் இயற்கைக்கு பயப்படும் பேர்வழிகள் எல்லோரும் பயப்படுபவர்கள்.
மழைக்குப் பயந்து குடை,
சிறு கற்களுக்குப் பயந்து கால்களில் செருப்பு,
இப்படி அடுக்கிக் கொண்டே போக பயமில்லாத மனிதர்களில்லை.
உள்ளிருக்கும் பேய்கள் வெளிப்படுவதும் பயத்தாலும் பொறாமையாலும்.
அறியாத பேய்களே நீங்க தூங்க பேயாக நான் விழித்திருக்கிறேன்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Jul-18, 12:20 am)
பார்வை : 860

மேலே