புதைந்த சிலை

அத்திருவிழா எப்படியாவது நடக்க வேண்டுமென பூசாரி கடவுளை வேண்டிக் கொண்டு தன் வீடு திரும்பினார். வீட்டில் சென்றதும் வருத்தத்துடன் யாரை சந்திப்பது குறிசொல்பவர் சொன்னது வாழும் ஆலமரம் கீழே இருக்கும் தனிநபர் அம்முனிவர் சொன்னது வாழும் நடக்காதவாறு எப்படி காப்பாற்றுவது என எண்ணிக்கொண்டே தன்னிலை மறந்து உறங்க ஆரம்பித்தார்.
அப்பொழுது திடீரென்று ஒரு குரல் கேட்க பூசாரி இங்கு நடப்பது அனைத்தும் நன்மைக்கே பொறுத்திருந்து பார். என ஒரு குரல் பதில் சொல்வது போல தோன்றியது.
பூசாரியும் அதைக் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்து கொண்டார்.
இறைவா என்ன இந்த சோதனை ?உன் குரலா அது? என்ன நடக்கப்போகிறது.என தன் மனதை தேத்திக்கொண்டு த்ன் பணியை மேற்கொண்டார்.

வைஷ்ணவியும் தன் தந்தையோடு கோவிலுக்கும் வீட்டிற்கு சென்று தன் பணியை தொடர்கிறார். தர்மகர்த்தா இரண்டு நாட்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை என வேலை என்னவோ? தெரியவில்லை.

இப்படியே நான்கைந்து நாட்கள் கழிந்தது. அன்று பௌர்ணமி மிகவும் விசேஷமான நாள் மக்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து அந்த கடவுளை வணங்கிவிட்டு
வீடு திரும்பினார்கள் திருப்தியுடன்,
பூசாரியும் வழக்கம் போல இரவு 9 மணியளவில் நெய்வேதியம் காட்டிவிட்டு கோவில் வளாகத்தில் பூட்டிக் கொண்டார்.

நள்ளிரவு பவுர்ணமி மிகவும் பிரகாசமாக இருந்தது அச்சிலை.
மறுநாள் அதிகாலை பூசாரி தன் பணியைத் தொடர தன் மகளுடன் கோயில் வளாகத்தினை திறந்தார்.
திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
இருவருமே அதிர்ந்து கூச்சலிட்டு அழத் தொடங்கினர். இறைவா இது என்ன சோதனை?

ஊர்மக்கள் ஒருவர் ஒருவராக கோவிலில் திரண்டனர். அனைவருமே அழத் தொடங்கினர்.
திருவிழா நெருங்கப் போகிறது.
இது என்ன சோதனை இறைவா?
தர்மகர்த்தாவும் வெளியூர் சென்று வந்து விட்டார். அவரும் கோவிலுக்குள்விரைந்தார்.
என்ன நடக்கிறது இங்கே?
நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம். குறி சொல்பவரும் நுழைந்தார். நான் சொன்னது சரியாகப் போய்விட்டது. திருவிழாவில் ஏதோ தடங்கல் வரப்போகிறது என்று அவரும் அழத்தொடங்கினார்.



இங்கு என்ன நடந்தது ?அனைவரும் என் திகைத்து நிற்கின்றனர் ? திருவிழா நடக்குமா? நடக்காதா? தர்மகத்தா என்ன முடிவு எடுப்பார்? குறிசொல்பவர் என்ன சொல்வார்? யார் என்ன செய்தார்கள்?

எழுதியவர் : உமா மணி படைப்பு (23-Jul-18, 9:25 am)
சேர்த்தது : உமா
Tanglish : buthaintha silai
பார்வை : 147

மேலே