பாட்டி சொன்ன கதை

ஒரு ஊரில் அரசன் ஒருவன்
அவ்வூரில் உள்ள மக்களுக்கு பறை ஓன்று அறிவித்தான்
பரிச பொருட்கள் இனாமாக தருவதாகவும் எவர் முதலில் வந்து பெற்றுக் கொள்கிறார்களோ
அவர்களுக்கே பரிசுகள் உடையதாகவும் அறிவித்தான்.
சனங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு
மன்னன் அரண்மனைக்கு சென்றனர் ,
மன்னன் மக்களை பார்த்து இதோ இங்கே எல்லா பொருட்களும்
.ஆனால் ஒருவர் ஒரு பொருளை மட்டுமே பரிசாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்
சனங்களும் ஒவ்வொரு பொருளாக எடுத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மன்னனை வாழ்த்தி விட்டு சென்று கொண்டு இருந்தனர்
ஆனால் ஒரேயொரு சிறுமி மட்டும் அரண்மனைக்கு வந்து கொண்டு இருக்கும் போது
வழியில் பசுமாடு ஓன்று கத்திக்கொண்டு இருந்தது அது தாகம் கொண்டு கத்துவதை பார்த்த சிறுமி
அவ்வழியிலுள்ள கிணற்றில் இருந்து நீர் எடுத்து வந்து பசுவுக்கு கொடுத்து விட்டு நடந்தாள்
ஆட்டுக் குட்டியொன்று தாய் நிற்குமிடம் தெரியாது தவித்துக் கொண்டு கத்தியது
இதை பார்த்த சிறுமிக்கு இரக்கம் மேலிட்டது
ஆடு நிற்குமிடம் பார்த்த சிறுமி அக்குட்டியை தாயிடம் சேர்த்து விட்டு நடந்தாள்
இன்னும் கொஞ்ச தூரம் செல்ல ஒரு வயதான மனிதன் பொல்லுடன் தாண்டி தாண்டி நடந்து வந்ததை பார்த்த சிறுமி
அவருக்கும் உதவி செய்து பின் வேகமாக அரண்மனைக்கு சென்றாள். அங்கு மக்கள் அனைவரும் பரிசுகள் பெற்று சென்று விட்டனர் .
கூட்டங்கள் எதுவும் இல்லை இதை பார்த்த சிறுமிக்கு சிறிது பயமும் வந்துவிட்டது .
இருந்தும் துணிவுடன் அரண்மைக்குள் சென்றாள் அங்கே மன்னன் அவளை வரவழைத்து
இவ்வளவு நேரமும் என்ன செய்தாய் எல்லாப் பொருட்களும் மக்கள் எடுத்து சென்று விட்டனர் .
அப்போ அந்த சிறுமி தான் வரும் வழியில் என்ன என்ன உதவிகள் செய்து வந்ததால் நேரம் போனது தெரியவில்லை என்றாள்
அதோ பார் அந்த சிறிய பொதி ஓன்று மட்டும் தான் இருக்கிறது நீ எடுத்துக் கொள் என்றார்
உடனே ஆவலுடன் சிறுமி ஓடிச் சென்று பொதியை எடுத்தாள் அப்போ மன்னன் அவளிடம் நீ அந்தப் பொதியை பிரித்துப் பார்
என்ன இருக்கிறது என்று . சிறுமி பொதியை ஆசையுடன் பிரித்தாள் ஆகா எல்லாம் தங்கம்
மிகவும் மகிழ்ச்சியோடு சிறுமி அரசனை வாழ்த்தி வணங்கினாள். உடனே மன்னன் பார்த்தாயா/ வரும் வழியில் எத்தனை நல்ல சேவைகள் செய்து வந்தாய்
அவை யாவும் வீண்போகவில்லை
ஒருவன் செய்கின்ற நன்மையே அவனுக்கு பன்மடங்கு நன்மைகளைக் கொடுக்கிறது என்று சிறுமியை தட்டிக் கொடுத்து பாராட்டி வழி அனுப்பி வைத்தார் .முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

எழுதியவர் : பாத்திமாமலர் (23-Jul-18, 2:38 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : paatti sonna kathai
பார்வை : 254

மேலே