கண்ணீர்க்கோலம்

என் கண்ணீர்துளியில்
புள்ளிவைத்து
காலம் போட்ட கோலம்
என் திருமணக்கோலம்..

நீயா நானா என்றே
என் வாழ்க்கையில் பொழுதுகள்
நீயே என்று தாழ்ந்தேன்
இன்னும் நிமிரவில்லை...

என்று கரையை கடக்கும்
இந்த சம்சாரப்புயல்
மீண்டும் இந்த நாணல்
நிமிர்ந்து வாழ...

கண்களில் நீரோட்டம்
நீர் காயும் காலம் எதுவோ
வேர்களில் ஈரம் இல்லை
ஆனாலும் சிரிக்கிறது
இந்த ஆண்மரம்..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (25-Jul-18, 9:02 am)
பார்வை : 108

மேலே