ஆன்மப் பயணம் - தொடர்ச்சி

நீர்பரப்பில் எழுந்து நின்ற ஆன்மாவிற்கு ஆச்சரியமேலிட நீர்மேல் பாதம் வைக்கும் போது விழுவேனோ என்ற சந்தேகம்
இருள் காதில் சொன்னது, " தன் பாதங்களின் மீதே சந்தேகம் கொள்பவனால் எழுந்து நடப்பது கடினம்,
தான் கால் ஊன்றிய பரப்பின் நம்பிக்கை இல்லாதவனால் கவனம் சிதறி கீழே விழ பரப்பினுள் மூழ்கி புதைகிறான். "என்றது.

யாரப்பா? அது முன்னாடி வந்நு பேசவேண்டியது தானே? அதென்ன சுற்றி பேசுவது?

சற்று கோபமாக கேட்கிறேன்.

மறுபடியும் பதில் இவ்வாறாக இருந்தது,

" என்ன சொல்லப்படுகிறது என்பதை உணராமல் சொன்னவனைத் தேடுகிறாயே!
எதற்காக, கோவில் கட்டக் கூம்பிடவா?
என் பெயரில் வரி வசூலித்து அதை சுருட்டிக் கொள்ளவா? ",
என்று எதிரோலி ஈயத்தைக் காய்ச்சி இதயத்தில் ஊற்றினாற்போல சேவிகள் வழி மனம் அறிநதது.

" எல்லாரோடும் என்னை சேர்த்துவிட்டீரா? ",என்று கேட்க,
" சேசே அப்படி அல்ல.
ஆமா நீ எங்கே இவ்வளவு தூரம்? ", என்பதற்குள், " பிரபஞ்ச எல்லையைக் காண வந்தேன். "என்றிட, " உம்மை தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
வாரும், இப்படி? ",என்றவாறு கறுப்பு நிற கை பற்றிக் கொண்டது.
அதோடு நகர்ந்தேன்.
சற்று நேரத்தில் நீர்ப்பரப்புக்குமேலே மலைமுகடு நீட்டி இருக்க அதன் மேல் அமர்ந்தேன்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (25-Jul-18, 8:13 am)
பார்வை : 334

மேலே