நொடிகள்
ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும்
நொடிகளில் தானே கடக்கமுடியும்
ஆயிரம் நொடிகளைக் கடந்தாலும்
ஒன்றிரண்டை தானே நினைவுகள் சுமக்கும்
அந்தச் சுமைகளையும் ஒரு நாள்
மரணம் இறக்கி வைத்துவிடும்
வாழ்வுக்கும் சாவுக்கும்
ஒரு நொடி தான் இடைவேளை எனவே
தினமும் புதிதாய் பிறந்ததுபோல்
கொண்டாடி வாழ்க்கையை ரசிப்போம்