வெற்றி பெறுவதன் நோக்கம்

வெற்றியே!

உன்னை எண்ணி போராடி
சோர்வடையும் நாடோடி

பணி பின்னே ஓடோடி
வேர்வைதான் மிஞ்சுதடி

தோல்விகள் என்னை புதைக்குதடி
விலக்கி பார்த்தால் நிற்பது முதல்படி

சாதிக்க பிறந்தேனடி
சாதனையில் உன்னை காண்பேனடி

இலக்கோ அந்த வானமடி
நான் நிற்பது மச்சி வீட்டு மாடியடி

குன்றுக்கு கூட
எனக்கு பாதை தெரியலடி

சோதனைகள் பல தடுக்குதடி
சாதிக்க மனமோ வெடிக்குதடி

சங்கடம் பல பிறக்குதடி
மனமோ இன்று நொறுங்குதடி

வெற்றியை ரசித்தது இல்லையடி
தோல்வியை நழுவவிட்டது இல்லையடி

அதனால் தானடி
உன்னை அடைவதே என் நோக்கமடி

,இப்படிக்கு
...தமிழ்ரசிகன்

எழுதியவர் : தமிழ்ரசிகன் (25-Jul-18, 10:31 am)
சேர்த்தது : தமிழ் ரசிகன்
பார்வை : 146

மேலே