காண்பேனோ
உன்னை சந்திக்கும்
நேரத்திலே
உன்னை எந்தன்
கண் காணும்
கனத்திலே
நிலவொன்றை
காண்பேனோ
அதுவும் என்னை காண
முழு நிலவாகக்
காண்பேனோ
புது சிறகு முளைத்த
சிட்டுக் குருவி ஒன்னை
காண்பேனோ
அதுவும் என்னை காண
சிறகு விரிக்க
காண்பேனோ
மணமணக்கும்
மல்லிகைப் பூங்கொத்தை
காண்பேனோ
அதுவும் என்னை
காண மொட்டு விரிக்க
காண்பேனோ
உன் கண் காண
எந்தன் கற்பனை
எல்லாம் தூலாகுமோ
நீ தானே இந்த
மொத்த பூமிக்கும்
ஒத்த அழகி ஒப்பான அழகி
அதை கண்டேன்
உன்னை சந்தித்த
நேரத்திலே
உன்னை எந்தன்
கண் காணும் கனத்திலே...!!!