பாலியல் ஓநாய்கள்
பாலியல் ஓநாய்கள்
கள்ளிப்பால் கலாச்சாரம் ஒழிந்து பெருமூச்சு விடுமுன் ,
காமத்துப்பால் கலாச்சாரம் எங்கிருந்து முளைத்தது..??
தமையனாய் ..
தகப்பனாய் ..
தாத்தனாய் ..
நினைத்து பழகிய பிஞ்சுகளை ,
பஞ்சு மெத்தையில்
கிடத்த நினைத்தது நர மாமிச கூட்டத்திலும் ,இல்லையே..
இனி எப்படி அண்டை வீட்டு கைக்குழந்தையை கொஞ்சுவேன் ..
அந்த தாயின் நெஞ்சு சந்தேகிக்குமோ என்னை ?
தடுக்கி விழும் குழந்தையை எப்படி தூக்குவேன் ?
நான் அவனோ என்று தாக்குமோ சமூகம் ..?
சக பயணியாய் பயணிக்கும் மழலையிடம் பெயர் கேட்டதும் கம்பார்ட்மெண்ட்டே திரும்பி பார்க்குதே ..!!!
வட நாட்டவனும் பெண்ணை கடத்தித்தான் கொன்றான் ..
அண்டை வீட்டவனோ உறவாடியே கொன்றீரே ..
பெற்ற மகளே எட்டி நின்று தேநீர் தரும் நிலையை உருவாக்கிவிட்டீரே ..
அண்ணா அங்கிள் என புன்னகைத்த அண்டை வீட்டுப் பூக்களும் ,
புன்முறுவலை கூட புறமுதுகில் காட்டி போகுதே ..
புலன்களை அடக்காதவன் மனிதனே இல்லை என நினைக்கிறேன் ..
எவனோ செய்த குற்றத்தால் ஆண்மையையே வெறுக்கிறேன்..
எட்டு மாத குழந்தைக்குள் என்ன சுகம் கண்டீரோ ??
உன் தாய் மடி பாலைக்கூட
காமம்க்கொண்டு உண்டீரோ ???
எதிர்ப்பார்ப்புடன் வாழும் பெண் பிள்ளைகளின்
எதிர்க்காலத்தைக் கெடுத்து ,
என்னத்தை எடுத்துச் செல்வீரோ
மண்ணுலகை விடுத்து ..
தூக்கெல்லாம் உமக்கு துளிக்கூட போறாதடா ..
உமை நடுத்தெருவில் கிடத்தி
வெறிநாய்க்கொண்டு குதற்றாமல் என் மனம் ஆறாதடா ...
- ஜிதேந்திர பாபு ஜானகிராமன்