காதல்

உன் கூரான வாளொத்த பார்வை
என் நெஞ்சைக் கிள்ளியதே, என்னவா ,
அந்த காயத்தில் காதலெனும் விதை விதைத்து,
நீ கண்ணால் என்னை தொட்ட சுகம்,
அதோ அந்த காதல் விதை, தூளிராய்
வளர்ந்து என்னுள் இருக்கிறதே ஒரு செடியாய்
அதில் காண்கின்றேனே, எப்போது
உன் அன்பு கரங்கள் என்னை அணைத்து
தீண்டும் இன்பம் தருமோ என்று
காத்திருக்கிறேன் கன்னி நான் உனக்காக
நீ என் நெஞ்சில் வளரும் காதல்
செடிக்கு அன்பெனும் நீரமுது ஊட்டுவாய்
என்றே, இன்னும் என்ன சொல்லவேண்டும்
என்னன்பே, தாமதமேன் இன்னும் இந்த
பெண்ணை உன் மனைவியாய் ஏற்றுக்கொள்ள
நீ வாராது போயின் நான் கன்னியாய்
உன் நினைவிலேயே காலம் கழித்துடுவேன்
ஏனெனில் உன் பார்வையிலேயே உன்னை
தொட்ட சுகம் என் நெஞ்சில் ...............

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசு (26-Jul-18, 7:56 am)
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே