பலேத் திருடர்கள்

பலேத் திருடர்கள்

நல்லவர் கெட்டவர் நாட்டில் ரெண்டுவகை
நல்லவ ரையறிந் போற்றிடா மக்களாம்
நாட்டில் கெட்டவனும் துட்டனும் நாயகராம்
சீவலப் பேரி உண்மைக் கொலைகாரன்
சீவலப் பேரி சினிமா நாயகனாம்
மலையனூர் மம்மட்டி நாயக னில்லை
மம்மட்டி யான்பெருங் கொலைகாரன் தெரியும்
மரம்வெட்டி வீரப்பன் கொலைநூறு செய்தவன்
மம்மட்டி வரிசையில் சந்தன வீரப்பன்
மம்மட்டி சீவலப் பேரிபாண்டி வரிசையில்
மரம்வெட்டி வீரப்பனோ கோழைக் கொலைஞ்சன்
ஆணைகொன் றத்தந்தம் கடத்திப் பிழைத்தான்
ஆரளைக் கள்வனாம் அவனும்
அகண்டதிரை நாயகராய் காண்பித்த லேனோ


வழிப்பறி செய்பவன் வழிகாட்டு வனாசொல்
வகையற்ற சினிமாவால் வாழ்க்கை தொலைத்தார்
சினிமா மலைக்கள்ளன் போலின்று கதையுண்டா
சினிமாக் காரனால் நாடுகுட்டிச் சுவராம்
சினிமாவில் பார்த்து கெட்டார் மக்கள்
சினிமா வால்பணம் பார்க்க நினைக்கும்
சிலசினிமா எடுக்கும் குள்ளநரிப் பேய்கள்
இவனுமே மேடையேறி கலாசாரம் பேசுகிறான்
இவன்தன் மானம் விற்றுகாசு பார்ப்பன்
இன்னும் ஐயரை யேசியுர நினைப்போ
சினிமாவில் சீரழிந் ததோர்வுயர் சமுதாயம்
சினிமா நாடக மேடையெ திலும்பேசி
சிரிக்கவைத் துகாசு பார்த்த கும்கும்பல்
சினிமாவால் சீரழித் தார்நாட்டின் மக்களை
சீரழிக்கும் சினிமா வேண்டுமா
சினிமா சீக்கிரமே மக்களைக் கெடுத்திடுமே


சின்னத் திருடன் பெரியத் திருடனாக
சினிமா பத்திரிகை அவனையா தரிப்பதேன்
சினிமாக் காரனை திருடன் கடத்த
சீரியல் பத்திரிகை பேரம் பேசலேன்
சினிமாப் பத்திரிகை போதுமே
சிவமே யெனசும்மா யிருத்தல் போதுமே

எழுதியவர் : பழனிராஜன் (26-Jul-18, 11:31 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 193

மேலே