தன்னம்பிக்கை

உன்னால் முடியுமா என்று நினைக்காதே
உன்னால் மட்டும் தான் முடியும் என நினை

என்ன செய்வது என நினைக்காதே
எல்லாம் செய்ய முடியும் என நினை

இதுதான் என் தகுதி என நினைக்காதே
தகுதி மீறியும் உழைக்க நினை

தடைகள் வருமோ என தயங்கி
நிற்காதே
தடைகள் வந்தாலும் தயங்காமல் செல்

தோல்வியைக் கண்டு பயப்படாதே
வெற்றி காண போராடு

நான் உயர்வேன் என நினைவில் கொள்
உழைப்பை முயற்சியை எந்நிலையிலும் விடாமல் முன்னேறு
உனது வெற்றி நிச்சயம் உணர்ந்திடு......

எழுதியவர் : உமா மணி படைப்பு (26-Jul-18, 9:46 am)
Tanglish : thannambikkai
பார்வை : 172

மேலே