டிராஃபிக் இராமசாமி
டிராஃபிக் ராமசாமி
கல்லும் கூட கண்ணீர் சிந்தும்
உன் வாழ்க்கையை கண்டு...
நெருப்பும் கூட கருணை காட்டும்
உன் நிலையை கண்டு...
ஒளியும் கூட பின்வாங்கும்
உன் வேகத்தை கண்டு...
தோல்வியும் கூட தள்ளி நிற்க்கும்
உன் முயற்சியை கண்டு...
எமனும் கூட யோசித்து நிற்ப்பான்
உன்னை கூட்டிச் செல்ல...
மனிதனுக்கே மனிதன் யாரென்று கற்றுக்கெடுத்தாய்
உன் மனிதாபத்தால் ஐயா...
சட்டமே சட்டத்தை கண்டு அஞ்சுகிறது
உன் துணிச்சலை கண்டு என் மனம் திகைக்கிறது...
இத்தனை இளைஞனால் இந்த இளைஞனுக்கு
ஈடுகொடுக்க முடியவில்லையே...
- த.சுரேஷ்.