அழகிய நதியே
ஓடும் நதியாய் நீ
உன்னுள் நீந்தும் மீனாய் நான்
உன் அன்பு பெருக பெருக
என் வாழ்நாள் நீடிக்கும்
நீ கடந்து செல்லும் பாதையை
பின் தொடர்ந்து நீந்தி வருவேன்
நீ கவலையில் வறண்டு போகும்போது
என் உயிர் நாடி அடங்குகிறது
கண்கள் கலங்குகிறது - என்
கண்ணீரால் உன் அன்பை பெருகசெய்ய..
என் அன்பே நீ பிரியும்போது
என் ஆன்மாவை எடுத்துச்செல்ல.....