பெண்ணே உந்தன் பிரியம் வேண்டும்
வண்ணக் கனவாய் அவள் வந்தாள்
வட்ட நிலவாய் ஒளி தந்தாள்
எண்ணம் மயக்கும் சுகம் தந்தாள்
எத்தனை எத்தனை சுவை தந்தாள்
கண்ணே வாவென அழைக்கு முன்பே
கலைந்து சென்றாள் மறைந்து போனாள்
சின்னஞ் சிறுவகை தவற்றை எல்லாம்
சிரத்தை கொண்டு முறைப்பது வீணடி
திண்ணமாய் உன்நினைவு என்னை வதைக்குதடி
திரும்பும் திசையெலாம் உன்முகம் தெரியுதடி
பெண்ணே உன்னால் பித்தனாய் அலைகிறேன்
பிரியமாய் வந்திடடீ பேதமை கழைந்திடடீ
அஷ்ரப் அலி