கோள்களின் கோலங்கள்
திங்களுக்கு முழு வெண்மை அழகு
செவ்வாய்க்கு குருதிச் செந்நிறம் அழகு
புதனுக்கு புத்திதான் அழகு
வியாழனுக்கு அனுகூலம் அழகு
வெள்ளிக்கு முளைக்கும் காலை அழகு
சனிக்கு நள்ளாறு நீர் அழகு
ஞாயிறுக்கு என்றும் வானமே அழகு
நம்மிருவருக்கும் வாரக்கடைசியே அழகு
அப்படிச் சொல்லலாமாடா என்அன்புக் கண்ணா
வானத்தில் நமக்காகவே சுற்றும் கிரகங்களை மறக்கலாமா
நவகிரகங்களையும் சுற்றி வருவதுதான் நமக்கு அழகு !