எங்கே லட்சியம்

கனவுகள் கூட கலைந்து போகுதே...
காலம் மாறும் போது
நிஜங்கள் கூட கனவாய் போகுதே...
மனம் வாடும் போது
அளவே இல்லா ஓசைகள் அடிக்கடி
லட்சியம் பற்றி சொல்லுதே...
தூக்கம் இல்லா இரவுகள் என்
கனவை நினைத்து ஏங்குதே...
மனம் அடையத் துடிக்கும் எல்லையோ
தூர தூர போகுதே....
தேடி ஓடும் லட்சியம் செல்ல
வழிகள் இன்றி தேங்குதே...
வழி தேடி பிடிக்கும் எண்ணமோ
என் மூச்சாய் பரவி கிடக்குதே...