திரும்பிப்பார்
வேண்டாம் வாழ்க்கை என்றிருந்த நீ திரும்பிப்பார்...
தோல்வி உனக்கு தோள்கொடுத்ததை திரும்பிப்பார்...
கண்ணீரால் நீ வாழ்க்கைக் கரையேறினதை திரும்பிப்பார்...
அவமானங்கள் உனக்குள் விதைத்த இலட்சியங்களைத் திரும்பிப்பார்...
அலட்சியங்கள் சொல்லித்தந்த தன்னம்பிக்கையைத் திரும்பிப்பார்...
சறுக்கினபோது கைகொடுத்த முயற்சிகளைத் திரும்பிப்பார்...
ஆதரவற்ற நேரங்களில் கிடைத்த நிபந்தனையற்ற அன்பைத் திரும்பிப்பார்....