ஜெயமோகன் Vs பெண்ணியவாதிகள்------------------------------------------இலக்கிய விவாதக் கருத்துக்கள் ----படிப்போம் பகிர்வோம்
காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்குக் குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலித் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?-
ஞானக்கூத்தன்.
------------------------------------------------------------------------------
இந்தக் கவிதை நாய்களைப் பற்றியதல்ல என்பது புரிபவர்கள் மட்டும் மேலே படிக்கவும். நாஞ்சில் நாடன் அவருக்குப் பிடித்த ஒரு லிஸ்ட் போடப்போய் கடைசியில் அது ஜெயமோகன் தலையில் போய் விடிந்திருக்கிறது. அவரு இதுக்கெல்லாம் அசருகிற ஆள் இல்லைதான். அவரும் சொல்லலைன்னா யார் தான் சொல்றது.
முதலில் இந்தப் பெண் எழுத்தாளர்களில் யாரெல்லாம் அடங்குவர்? கையெழுத்துப் போட்டிருப்பதில் எட்டு பேரின் பெயரை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதில் இருவர் பத்திரிகையாளர்கள். சரி, யாரெல்லாம் எழுத்தாளர்னு இவங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க? எழுதுறவங்க எல்லாம் எழுத்தாளர்னு நினைச்சுக்கிட்டாங்க போல. அப்படிப்பார்த்தால் தமிழ்நாட்டில் பாதிப்பேர் எழுத்தார்கள்தான். ஜெயமோகன் சொன்ன விஷயத்தைப் படித்தப் பெண்ணியவாதிகள் அதை முழுமையாக உள்வாங்கினார்களான்னே தெரியலை? அப்படி உள்வாங்கியிருந்தால் அவங்க இரண்டு விஷயத்தைச் செய்திருப்பார்கள். 1) தரமான படைப்பைக் கொடுக்க முயற்சித்திருப்பார்கள் அல்லது 2) எழுதுறதை நிப்பாட்டியிருப்பார்கள்.
நானெல்லாம் ரெம்ப ரெம்பச் சாதாரண வாசகன். இதுவரை எந்த ஒரு பெண் படைப்பாளியின் படைப்பும் 10 பக்கங்களுக்கு மேல் படிக்கும்படி தரமானதாய் இல்லை. நீ யார்றா பெரிய ஆளான்னு கேட்கலாம். 28 வருட வாசிப்புப் பழக்கம் உள்ள எனக்கு என் சொந்த வாசிப்பு சார்ந்து தோன்றிய அபிப்பிராயம் இது. இந்தப் பெண்கள் மனசிலே என்னதான் நினைச்சிருக்காங்கன்னு புரியலை. கீழே உள்ள லிஸ்டைப் பாருங்க,
1. சுந்தர ராமசாமி
2. தி.ஜானகிராமன்
3. புதுமைப் பித்தன்
4. கி.ராஜநாராயணன்
5. ஜெயமோகன்
6. நாஞ்சில் நாடன்
7. எஸ். ராமகிருஷ்ணன்
8. விமலாதித்த மாமல்லன்
9. மனுஷ்ய புத்திரன்
10. அசோகமித்ரன்
11. பிரமிள்
12. விக்கிரமாதித்யன்
13. ஆ. மாதவன்
14. தோப்பில் முஹம்மது மீரான்
15. ஜி. நாகராஜன்
16. சி.சு. செல்லப்பா
17. வண்ணநிலவன்
18. க. நா. சுப்ரமண்யம்
இது ஒரு மிகச் சுருக்கமான பட்டியல்தான். கொஞ்சம் யோசிச்சால் இன்னும் ஒரு 10 தேறும்.
இதை அளவுகோலாக வைத்து இந்தப் பெண் எழுத்தாளர்களின் எழுத்தை ஒப்பிட முடியுமா என்ன?
இம்மாம்பெரிய கூட்டமா சேர்ந்து எழுதுன அறிக்கையைக் கொஞ்சம் பார்ப்போம்.
//எழுத்திற்கென்றொரு தார்மீகப் பொறுப்பு இருக்கிறது. பேராசான் கார்ல் மார்க்ஸ் போன்றோர் தங்களது எழுத்தின்மூலமாக மனிதகுலத்தின் சிந்தனைப்போக்கையும் வரலாற்றையும் மாற்றியமைத்தார்கள். அத்தகைய சக்திவாய்ந்த எழுத்தானது அடிப்படைவாதிகளது இருப்பிற்கான களமாக அமைந்துவிடும்போது, அந்தச் சமூகமே சீரழிந்துபோகும் கெடுவாய்ப்பு இருக்கிறது. அந்த இழிநிலையை நோக்கி தமிழிலக்கியம் நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சங்கலந்த ஐயம், அண்மைக்காலமாகசில இலக்கியவாதிகளது பொறுப்பற்ற பேச்சினால் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுள், ஜெயமோகன் செய்துவரும் இலக்கிய மேட்டிமைத்தனங்கள் சொல்லுந்தரமற்றவை//
சத்தியமான வார்தைங்க ஆனால் ஜெயமோகனால் அல்ல. முலை, யோனி, பூனை, வெயில் போன்ற புழங்கிய சொற்களையும் சித்திரத்தையும் விட்டு வெளியே வரத்தெரியாமல் அதிலேயே உழன்று அதுதான் உன்னதப் படைப்பு எனக் கூத்தடிக்கும் உங்களால்தான் உண்மையான இலக்கியம் வெளித்தெரியாமல் போலி இலக்கியம் பல்லிளிக்கிறது.
------------------------------------------------------------------
//அதிகாரத்தரப்பை உயர்த்திப்பிடித்தல், சிறுபான்மையினரைத் தரந்தாழ்த்துதல், பிறமதங்கள்பால் சகிப்புத்தன்மையற்று இந்துத்துவத்தை முன்னிலைப்படுத்தல், இடதுசாரி சிந்தனையாளர்கள்பால் காழ்ப்புணர்வைக் கொட்டுதல், வரலாற்றைத் தன் நிலைப்பாடுகளுக்கியைந்தபடி திரிபுபடுத்துதல் இவற்றோடு ஆணாதிக்கத்தின் தடித்தனமும் அவரது எழுத்துக்களில் புரையோடிக்கிடக்கிறது. காலாகாலமாக ஆண்களே இந்தச் சமூகத்தை வழிநடத்திச் செல்லும் மேய்ப்பர்கள் என்ற ஆண்மையவாதத்திலிருந்தபடி தொடர்ந்து பெண்களுக்கெதிரான நச்சு வார்த்தைகளை இறைத்துவருகிறார். எழுத்துரு மாற்றம் இன்னபிற விடயங்களில் தனது “மேலான” கருத்துக்களைச் சொல்லி சர்ச்சைகளின்மூலம் “மஞ்சள் ஒளி வட்ட“த்தில் இருந்துகொண்டே இருக்கப் பிரியப்படுகிற அவரது மனச்சிக்கலைப் புரிந்துகொள்கிறோம்.//
ஹிஹி மெய்யாலுமேவா? இதையெல்லாம் புரிஞ்சுக்கிற நீங்க, உங்களின் படைப்புகள் இலக்கியமல்ல என்பதைப் புரியமுடியாதபடி இருப்பது ஏனோ. சுய சொரிதல் சுகமாயிருக்கும் எனபதாலா? அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உண்மை அதுதான். ஆம், குறிப்பிடும்படியாக எழுதிய எழுத்தாளினியை அடையாளம் காட்ட முடியுமா உங்களால்? ஏனோதானோவென பெயெரைச் சொல்லலாம், உண்மையாகவே சிறந்த படைப்பைக் காட்டுங்கள்.
-----------------------------------------------
//ஜெயமோகன், தமிழிலக்கிய வாசகர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆர்.சூடாமணி//
நன்றி கேள்ஸ்..இப்போது தான் சூடாமணியைக் கேள்விப்படுகிறேன். அடுத்தது யார்?
-------------
/தமிழின் முன்னோடிகளுள் ஒருவரான சூடாமணியின் இலக்கியப் பங்களிப்பையே தடாலடியாக நிராகரித்திருக்கிறார்//
சரியாக எழுதவில்லையெனில் என்ன சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? பெண் என்பதற்காக தலையில் தூக்கி வைத்து ஆட வேண்டுமா என்ன? எழுத்தாளன் என்பவன் பத்திரிகையாளன் அல்ல.
----------------------
//கேரள இலக்கிய ஆளுமைகளுள் ஒருவரான மாதவிக்குட்டி என்கிற கமலா தாஸ்
மறைந்தபோது, அவரைக் குறித்து எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரையில்//
கேரளாவுக்கு அப்பப்போ போனதோட சரி. கமலாதாஸ் பற்றிப் படித்ததில்லை நான். ஸோ நோ கமெண்ட்ஸ்.
-----------------
//படைப்பு முதற்கொண்டு பெண்களின் அனைத்துச் செயற்பாடுகளும் அவர்களது தோற்றம் மற்றும் உடலையே அடிப்படையாகக் கொண்டவை என்பதை ஜெயமோகன் நிறுவமுற்படுகிறார். மேலதிகமாக, தமிழ்கூறும் நல்லுலகில் அறியப்பட்ட படைப்பாளியாக இருக்கக்கூடிய ஜெயமோகனின், அழகு பற்றிய வரைவிலக்கண இலட்சணமும் நமக்குத் தெரிந்துபோகிறது. இந்தப் பாரதத் திருநாட்டில் விசித்திரமான நடத்தைகளோடும் பேச்சுக்களோடும் உலவும் சில ஆண் இலக்கியவாதிகளை எவ்வுணர்ச்சி செலுத்தியது என்பதைக் குறித்து ஜெயமோகன் ஏன் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை என்பதை, அவரது உள்ளொளிதான் அவருக்கும் நமக்கும் விளக்கிச்சொல்லவேண்டும்//
நீங்கெல்லாம் உண்மையிலேயே வாசிக்கிறீங்களா இல்லையா? வாசிப்புப் பழக்கமே இல்லாத எழுத்தாளினிக் கூட்டம் உருவாகி வருவது வருந்தத்தக்கது. முதலில் வாசித்துவிட்டு வாங்க பொறுமையாகப் பேசலாம்.
---------------
//“இன்று இளம்வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால் ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.”//
யம்மா தாய்மார்களே...! அவர் சொல்றது நூற்றுக்குநூறு உண்மை. போலிகளின் பளபளப்பில் அசல் அமுங்கிவிடுகிறது. புக் ஃபேர்ல மட்டும் படிக்கிற வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம். உத்வேகத்தோடு இருக்கும் ஒரு வாசகன் உங்களைப் போன்ற போலி எழுத்தாளர்களின் படைப்புகளைத் (!) தாண்டுவது பெரிய சவால்.
-----------------
//“சில பக்கங்களுக்கு பிழையில்லாமல் தமிழ் எழுதக்கூட தெரியாதவர்கள் பலர்.உட்கார்ந்து பத்துப் பக்கம் தொடர்ந்து எழுதக்கூட பொறுமையற்றவர்கள்”என்கிறார். பெண் படைப்பாளிகள்மீது காழ்ப்புணர்வுகொண்டு எழுதிய குற்றச்சாட்டுக் கட்டுரையிலேயே எழுத்துப்பிழை விட்ட புத்திசாலி, பெண்படைப்பாளிகளுக்கு இலக்கண வகுப்பெடுப்பதை காலக்கொடுமையன்றி வேறென்னவெனச் சொல்வது?//
அக்காமார்களே, (பெண் படைப்பாளிகள்மீது காழ்ப்புணர்வுகொண்டு எழுதிய குற்றச்சாட்டுக் கட்டுரையிலேயே எழுத்துப்பிழை விட்ட புத்திசாலி, பெண்படைப்பாளிகளுக்கு இலக்கண வகுப்பெடுப்பதை காலக்கொடுமையன்றி வேறென்னவெனச் சொல்வது?) நீங்க சரியாத்தான் எழுதியிருக்கீங்களா? ஹிஹி
-----------------
//“இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத் தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே. இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற சவாலைச் சந்திக்கமுடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புக்களைப் பொத்திக்கொள்ள உருவாக்கிக்கொள்ளும் ஒரு எளிய தற்காப்புமுறை மட்டுமே” . “இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கிவீசிவிட்டு வரும் உண்மையான படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது.”//
அவரின் ஒட்டுமொத்தக் கருத்தின் சாரமும் இதில்தான் அடங்கியிருக்கிறது. புரிகிறதா? இல்லை நெஞ்சு எரிகிறதா?
-------------
//எத்தனை வன்மம், காழ்ப்புணர்வு, ஒவ்வாமை இருந்தால் இப்படி எழுதமுடியும்!
ஒருவருக்குள் இத்தனை மன இருட்டும் வெறுப்புணர்வும் மறைந்திருப்பது
அதிர்ச்சியூட்டுவதாயிருக்கிறது. பெண்ணியம் என்ற சொல்லின் பொருள்,
‘ஆண்கள்மீதான வெறுப்பு’ என்ற தவறான புரிதலையே ஜெயமோகனும்
கொண்டிருக்கிறார். அதனால்தான் அந்தச் சொல்மீது இத்தனை செருப்படி
விழுகிறது. மேலும்,‘தமிழ் காத்திருக்கிறது’என்று மொழிவதன் மூலம் அவர்
சொல்ல எண்ணுவது ஒன்றுதான்: இங்கு எழுதிக்கொண்டிருக்கும் பெண்களுள் யாருமே
குறிப்பிடத்தக்க அளவில் எழுதவில்லை, அவர்கள் அடையாளமற்றவர்கள், ஆகவே,
தமிழிலக்கியத்தில் பங்குதாரர்களாக உரிமை கொண்டாடும் பாத்தியதை அற்றவர்கள்
என்பதையே அவர் தன் ஆணித்தரமான வாதங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிறுவ
முயற்சிக்கிறார்.//
மெய்யாலுமே உண்மைதாங்கோ! அவர் அதைத்தான் சொல்ல வருகிறார். உண்மையிலேயே பதில் சொல்லுங்கள். புதுமைப்பித்தன், சுரா முதலான வரிசையில் உங்களை வைக்க முடியுமா? ப்ளீஸ் கொஞ்சம் யோசிங்க.
-------------------
//‘பெண்களுக்கு ஆழமான வாசிப்பு கிடையாது’என்று சொல்வதன் மூலம் இன்றுவரை அவர் செய்துவருகிறார். எழுதுகிற பெண்களது வாசிப்பின் ஆழத்தை ஜெயமோகன் போன்ற இலக்கியப் பிதாமகர்களிடத்தில் அடிக்கடி சென்று நிரூபித்துச் சான்றிதழ் பெற்றுவருவதன் சாத்தியங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம்.//
ரொம்பத் தப்பா யோசிக்கிறீங்க, உங்களின் வாசிப்பையும் அனுபவத்தையும் படைப்பில் காட்டுங்கள். அதன் மூலம் மட்டுமே நீங்கள் அறியப்பட வேண்டும். தடாலடி நிகழ்வுகளின் மூலம் நீங்கள் அறியப்படுவது உங்களுக்கு உவப்பானதா என்ன? ஒரு எழுத்தாளினி இவ்வாறு அறியப்பட வேண்டும் என்றா எண்ணுகிறீர்கள்?
------------
//“அடிப்படையான வரலாற்றுணர்வோ சமநிலையோ இல்லாத அருந்ததி போன்ற குருவிமண்டைகள் ஊடகங்களில் இன்று பெறும் அதீத முக்கியத்துவம் மிக மிக ஆச்சரியமானது” என்கிறார் ஜெயமோகன்.
அருந்ததிராயின் நாவல்மீது, அவர் மேலைத்தேய ஊடகங்களால் அளவுக்குமீறித் தூக்கிப்பிடிக்கப்படுகிறார் என்ற விமர்சனத்தின்மீது எங்களிற் சிலருக்கும் உடன்பாடு உண்டு. ஆனால், ஒருவரை, அவரது தோற்றத்தினை முன்வைத்து இகழும்அற்பத்தனத்தை எக்காரணங்கொண்டும் மன்னிக்கமுடியாது. நொண்டி என்றும், குரூபி என்றும், குருவிமண்டை என்றும், சல்லிக்குரல்கள் என்றும் சகமனிதரை
வசைபாடுவது அருவருப்பின் உச்சம்.//
ந. பிச்சமூர்த்தியின் கலை மரபும் மனிதநேயமும் புத்தகத்தில் சுரா யாப்பை மீறுவது தொடர்பாகச் சொல்லுவார். ''யாப்பைக் கற்பது குருவி அளவிற்கு மூளை உள்ள எல்லோராலும் முடியும் ''என. ஜெயமோகனும் அந்த அர்த்தத்தில் சொன்னதாகவே தோணுகிறது. இது உடல் சார்ந்த வசை என எப்படி எடுக்க முடிகிறது உங்களால்? அதுவும் படிமம், குறியீடு என இயங்கும் உங்களால்?
----------------
//இவரது பெண்வெறுப்பு தமிழகத்தையும் தாண்டி அகில இந்தியாவெங்ஙணும் விரிந்துபரந்துசெல்கிறது. அண்மையில், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களால், ஆனந்த விகடனில், ‘நம்பிக்கை நட்சத்திரங்கள்’என்று சுட்டப்பட்ட படைப்பாளிகளது பட்டியலைக் குறித்து ஜெயமோகன் கீழ்க்கண்டவாறு தன் “மேலான“ கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.//
நாஞ்சில் நாடனுக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்தபோது அவரை வசைபாடி வயிறெரிந்த பெண் எழுத்தாளர்களும் நாஞ்சில் நாடன் வெளியிட்ட லிஸ்டில் உண்டு. எப்பவும் ஆணுக்குத் தானா? ஏன் எங்களுக்கு இல்லை? என கேட்ட ஒரு எழுதாயினியை எனக்குத் தெரியும். "அப்படி என்னதான் நீங்கெல்லாம் எழுதியிருக்கீங்க?"ன்னு கேட்டேன். அன்பிரண்ட் பண்ணுனது மட்டுமில்லாம அந்த போஸ்டையே பேஸ்புக்ல இருந்து தூக்கிட்டாங்க. நாஞ்சிலின் லிஸ்டை இப்போ எப்படி ஒத்துக்கிறீங்க? இப்போ அவரை உங்களுக்கெல்லாம் பிடிச்சிருக்கு போல?
---------
//ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது//
பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்னு பாரதி சொன்னது மாதிரி, தூமை, முலை, தொடை, யோனி எனக் கருப்பொருளாகக் கொண்டு அதிர்ச்சியை உண்டு பண்ணி பெயரெடுத்தவர்கள் பலர் உண்டு. மனுஷ்யபுத்திரனின் ஒற்றைக் கவிதைக்கு ஈடாக உங்களின் அத்தனைக் குப்பைகளை ஈடு வைத்தாலும் தகாது. வண்ணநிலவனின் ஒற்றைச் சிறுகதைக்கு உங்களின் அத்தனை எழுத்துப் புலம்பல்களை ஈடுவைத்தாலும் தகாது. நல்ல இலக்கியம் படித்து வெகுநாட்களாகிறது. படிப்பதெல்லாம் எங்கேயோ எப்போதோ படித்ததாகவே தோணுகிறது. ப்ளீஸ் நல்ல படைப்புகளோடு வாருங்கள். வாசகனின் கோரிக்கை இது.
--------------
கடைசியாக: காலங்காலமாய் சின்மயி முதற்கொண்டு பெண்களுக்கு வக்காலத்து வாங்கும் ஜெயமோகனை பெண்களுக்கு எதிரானவர் எனச் சொல்லும் நீங்கள் கொஞ்சமாவது வாசித்தால் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது.