அவள் பார்வையும் புன்னகையும்

அவள் ஒரே ஒருமுறைதான்
எனைப் பார்த்தாள்-அந்த
பார்வையில் அவள் கட்டிவைத்த
மந்திரம் யாதோ நான் அறியேன்
பார்த்த பார்வையுடன் அவள்
தந்த புன்னகை அதில் கலந்த
வசியம் யாதோ நானறியேன்
மீண்டும் கிடைக்குமோ அவள்
தரிசனம், அப்பார்வை புன்னகை
இரண்டும் கலந்து, ஏங்கிடும்
என் மனதை அவள் மனதோடு சேர்த்து
என் பரிசாய் என் காதலை
அவளுக்கு நான் அள்ளி அள்ளி தர
அதை என் காதலியாய் அவள் ஏற்றுக்கொள்ள
இருவரும் காதல் மழையில் நனைய
அவள் என்மீது தொடுத்த பார்வை
நிஜமானால் என் எண்ணமும் வெறும்
கனவென்று போகாமல் நெனவாகட்டுமே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Aug-18, 1:25 pm)
பார்வை : 278

மேலே