இதய பாரம் குறைப்பாயா
மண்ணோடு மழைத்துளி பேசும் வேளையில்
என் மனசோடு மௌன மொழி பேசியவள் நீ!
வண்ணத்துப்பூச்சி போல
சிறகடித்து
என் எண்ணத்தில் வானவில்லாய் விரிந்தவள் நீ!
இமைகளை தட்டி தட்டி என் இதயத்தில் காதல கீதம் இசைத்தவள் நீ!
மத்தாப்பூ சிரிப்பாலே
என் மனசில்
மின்னலாய் பூத்தவள் நீ!
ரோஜாவே!
உன் இதழ் விரித்து என் இதயத்தின் பாரம் குறைப்பது எப்போது!