மருண்ட விழிகளால் மயங்கினான் நெஞ்சம்
செங்கமல மலராய்ச்
சிவந்த கன்னங்கள்
குங்குமச் சிமிளாய்க்
குவிந்த இதழ்கள்
முதுகை மறைக்கக்
கவிழ்ந்த குழல்கள்
கொத்து முல்லை
உடல் மணக்க
முத்து முத்தாய்ச்
புன்னகை சிதற
தங்கப் பாளம்
தகர்த்துச் சுவரில்
செதுக்கிய சிற்பமாய்
உடற்கனம் தாங்காமல்
ஒடியும் இடையை
வளைத்துப் பிடித்தாள்
ஒற்றைக் கால்விரல்
நிலத்தில் கோலமிட
ஒய்யாரமாய் நின்றவள்
மருண்ட விழிகள்
என்னை நோக்கிய
மறுகணமே என்னிதயம்
அங்கேயே தடுமாறி
வீழ்வதைச் சற்றும்
அறியாதவளாய்........
அஷ்ரப் அலி