நண்பர்கள் தின வாழ்த்துகள்
கண் இமைக்கும் நேரத்தில்
சேர்வதல்ல நட்பு ...!
கண்ணும் இமையும் போல்
சேர்ந்து இருப்பதுதான் நட்பு ...!
வீட்டுக் கொடுப்பதை விட
விட்டு விலகாமல் இருப்பதுதான்
உண்மை நட்பு ...!
பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல
நட்பு ..
புரிந்து கொண்டு பழகுவதுதான்
நட்பு ...!
பண்பை காப்பதும் மட்டுமல்ல
பாசத்தை பொழிவதும்
நட்பு ...!
உலகில் உன்னத உறவு நட்பு !
உள்ளவரை பிரியாமல் இருப்பது
நட்பு ...!
பலரின்
முகமறியோம் அகமறியோம்
முகவரியும் அறியோம் !
ஆயினும்
மூச்சுள்ளவரை நண்பர்களாய்
இருப்போம் !
எழுத்து தளத்தின் உறுப்பினர்கள்
அனைவருக்கும் எனது
நண்பர்கள் தின வாழ்த்துகள் !
பழனி குமார்