இப்படி வாழ்ந்த நண்பர்கள் -நட்பு

அவ்விருவரும் நண்பர்கள்
உயிர்த்தோழர்கள் அவர்கள்
பிரிந்தே வாழ்ந்ததில்லை
அவன் உண்பதற்கு சென்றால்
இவனும் செல்வான் அவனோடு
அவன் உண்பதற்கு முன்னே
அவன் இலையின் உணவை
ஒரு கவளம் இவனே எடுத்து உண்பான்
முதலில் , பின்னரே நண்பனுக்கு
உண்ண அனுமதிப்பான் -ஒரு
மெய்காப்பாளன்போல -இவர்கள் என்ன
இன்றைய கர்ணனும்-துரியோதனர
நட்பிற்கு என்று பார்ப்பவர்
மூக்கில் விரலை வைத்து பார்ப்பார்
நட்பின் சிகரங்கள் நண்பர்கள்
இவ்விருவர்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-18, 11:02 am)
பார்வை : 400

மேலே