நண்பனுக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

இரத்தம் நீரைவிட தடித்ததென்பர்
இரத்தப்பாசத்தை கூறுகையில்
நட்பே நம் நட்பின் பாசத்தை
என்னென்று கூறுவேன் நான்
அது ரத்தப்பாசத்தையும் மிஞ்சியது
அதை நட்புரசம் என்பேன்
நீ தோழி, நான் உன் தோழன்
நம்மை இணைப்பது நட்பு ஒன்றே
தூய நட்பு , நட்புரசம் அதுவே
இன்றைய நன் நாளில் என் இனிய
வாழ்த்துக்கள் உனக்கு
நட்பில் வாழ்ந்திடுவோம் அதன்
உயர்வை என்றும் நேற்றியாய்
உணர்த்திடவே.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-18, 11:32 am)
பார்வை : 585

மேலே