விண்வெளி விஞ்ஞானி
திருநெல்வேலி அரசு
பொறியியல் கல்லூரி
இவருக்கு நிறைய
சொல்லிக் கொடுத்தது
என்பதை நம்மிடம் சொல்லி
மகிழ்கிறார் நிகார்...
விண்வெளி விஞ்ஞானி
நிகாருக்கு பூலோகம்
கண்பார்வையில்...
செவ்வாய் கிரகம்
கணினிப் பார்வையில்...
உலகம் கல்லெறி தூரம்
ஆகிப் போனாலும்...
கல்லெறி தூரத்தையும்
உலகமாய்ப் பார்க்கும்
விசாலம் இவரது விலாசம்...
நிகாரின் பேச்சில்
இது தெரிந்தது...
விக்ரம் சாராபாய்
அப்துல் கலாம் போன்றோரின்
விஞ்ஞான ஜர்னல்கள்
படித்திருப்பார் நிகார்
பாலகுமாரன் ஜெயகாந்தன்
சுஜாதா சிவசங்கரியின்
மெஞ்ஞான நூல்களையும்
படித்திருக்கிறார்...
படிப்பார்வத்தின் எல்லை
தொட்டவர் இவரெனப் புரிகிறது...
நல்ல சமூக ஆர்வலர்
இவரெனத் தெரிகிறது...
ராக்கெட்டின் இலக்கு
தப்புவதில்லை..
விண்வெளித் துறையில் நிகார்
இந்நிலையடைய அவரின்
தொலைநோக்கும் தப்பிடவில்லை...
நம்மோடு படித்தவர்களில்
உயரிய நிலைக்கு
வந்தவர்களின் பட்டியலை
பிறரிடம் நான் வாசிப்பதில்
இவரது பெயர்
முதன்மை இடத்தில்...
😀👍👏🌹