காதல், வாழ்வு,விதி

விதியோடு விளையாடும் வாழ்வா
வாழ்விற்கு விதியா ?
பயணிக்கிறது வாழ்வு புரியாமல்
புரிவைத்தேடி அலைகிறது நெஞ்சம்
இதற்கிடையில் பல எதிர்பார்ப்புக்குகள்
அதை வேள்வியாய் நான் செய்துமுடிக்க
எண்ண………………. மீண்டும்
விதியின் விளையாட்டு
எதிர்பார்ப்பு வேள்வி
வ்யர்த்தமாகிறது ,நான் தேடி அலைந்தவை
கானல் நீராய்ப்போக,
நானும் அவளும் வாழ்ந்த நாட்கள்
அவள் என்னைவிட்டு பிரிந்தபோதும்
என் மனதில் ஆணியிட்டு பொறிக்கப்பட்டவையா?
பிரிவு , அது விதியால்?
எனக்கும் அவளுக்கும் இடையே
நிலவும் தூரம் ………..
விதி என்னைப்பார்த்து சிரிக்கிறது
ஆனால் அந்த இனிய நாட்கள்
நானும் அவளும் கொஞ்சி குலாவி
காதலரான வாழ்ந்த நாட்கள்
நான் அவள் மீது வைத்த காதல்
அவள் என்மீது கொண்ட காதல்
அது என்னுளத்தில் பொறிக்கப்பட்டவை
என்னிடமிருந்து விதியால்
அதைப் பிரிக்கமுடியாது
நான் இருக்கும்வரை…
விதி………விதியே…...
உனைப் பார்த்து நான் சிரிக்கிறேன்
இப்போது
நீ தோற்றுவிட்டாய்….
காதல் அழிவதில்லை
காதலர் அழிந்தாலும்!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (5-Aug-18, 9:24 am)
பார்வை : 75

மேலே