ராணியாகப் போறேன்

அக்கா நான் இன்னும் மூணு மாசத்திலே ராணியாகப் போறேன்.
😊😊😊😊😊
எந்த நாட்டுக்கு ராணியாகப் போற?
😊😊😊😊
இந்தியாவில தான்.
😊😊😊😊
ஏண்டி ஒரு இந்திக்காரரு குடும்பத்து வேலைக்காரப் பெண் நீ ராணி ஆகப் போறயா? அவுங்க வீட்டு அடுப்பங்கரையிலயா?
😊😊😊😊
இல்லக்கா உண்மையைத் தான் சொல்லறேன்.
😊😊😊😊
என்னடி சொல்லற வெள்ளச்சி?
😊😊😊😊
எங்க மொதலாளி குடும்பம் பீகார்ல உள்ள சொந்த ஊருக்கே போகுது. என்னையும் என் கணவரையும் அவுங்ககூடவே அழச்சிட்டு போறாங்களாம்.
😊😊😊😊
சரி நீ ராணியாகறது?
😊😊😊😊
அக்கா நான் நம்ம தமிழ் நாட்டில வேலைக்காரி வெள்ளச்சி. பீகார் போனா அங்க நான் நவ்க்ராணி வெள்ளச்சி.
😊😊😊😊
அடி புத்திகெட்டவளே, இந்தில நவ்க்ராணின்னா வேவைக்காரின்னு அர்த்தம்டி.
😊😊😊😊😊
இருந்துட்டுப் போகுதக்கா. நவ்க்ராணில 'ராணி' இருக்குது. அதுபோதும் எனக்கு.
😊😊😊😊😊😊

எழுதியவர் : மலர் (5-Aug-18, 9:48 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 177

சிறந்த நகைச்சுவைகள்

மேலே