நண்பனுக்கோர் பல்லாண்டு

விதியின் கொடிய பிடியில்
நான் .....சிலிந்திக் கூட்டுக்குள்
மாட்டிய ஈபோல் இருக்க
தீயவரை நண்பராய் நினைத்து
அவர் சேர்க்கை ஒருபுறம் இழுக்க
உன்னை மறந்தே இருந்தேனே
நண்பா, ஏன், ஏன், தெரியலையே
நீயோ, என்னை நிழலாய் தொடர்ந்தால்
ஒவ்வொரு குழிபறிப்பிலும்
பின் தொடர்ந்து என்னை மீட்டாய்
உடலால் நான் தந்த தொல்லைகள்
அத்தனையும் தாங்கிக்கொண்டாய்
பெற்ற அன்னையைப்போல்,பூமியைப்போல்,
உள்ளத்தால் எனக்காக கண்ணீர் விட்டாய்
ஒரு தந்தையாய் என்னைக் கண்டித்தாய்
என் வசைச்சொல்லையும் பொருட்படுத்தாது
எல்லாம் துறந்த முனிவரைப்போல்
நான் பாதைத்தவரி வாழ்ந்த நாட்களில்
எனக்காகவே வாழ்ந்து , என்னை
தீயவையாம் புலியின் வாயிலிருந்து
காப்பாற்றி, நல்வழிப்படுத்தினாய்
மீண்டும் உன்னை நான் அறிந்துகொள்ள
என்ன தவம் செய்தேனோ இப்படியோர்
நட்பெனக்கு கிடைக்க , நட்பின் நாயகமே
நீ போற்றி, போற்றி
நீ பல்லாண்டி பல்லாண்டு வாழ்ந்திட
உன் போல் நண்பர்கள் பிறந்திட
என்போல் வீணர்களை நல்வழிப்படுத்த
பல்லாண்டு உனக்கு பாடினேன் இந்நாளில்
நண்பர்கள் தினா பொன்னாளில்

ஏற்றுக்கொள்வாயா என் நாள் வாழ்த்துக்களை
என் நண்பா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-Aug-18, 3:04 am)
பார்வை : 262

மேலே