நண்பன்

நண்பன்

அன்பு காட்டுபவன்
ஆதரவு அளிப்பவன்
இனியவை உரைப்பவன்
ஈகை குணம் கொண்டவன்
உவகை ஊட்டுபவன்
ஊன்றுகோலாய் இருப்பவன்
எதிரியிடமிருந்து காப்பவன்
ஏணிப்படியாய் இருப்பவன்
ஐம்புலன்கள் அடக்குபவன்
ஒற்றுமையாய் வாழ்பவன்
ஓயாது உதவுபவன்
ஔதாரியமாய் இருப்பவன்
ராரே

எழுதியவர் : ராரே (6-Aug-18, 7:38 am)
சேர்த்தது : ராரே
Tanglish : nanban
பார்வை : 691

மேலே