நண்பா நீ இல்லை நான் இல்லை

நண்பா நீ இல்லை நானில்லை
எத்தனை உறவுகள் என்னை கடந்தாலும் உன்னைப்போல் எங்கும் கண்டதில்லை
உன்னைப்போல் வாழ்த்தவும் இங்கு ஆளில்லை
உன்னைப்போல் என்னிடம் உரிமையோடு கோபிக்க யாருமில்லை
எத்தனை சண்டைகள்
எத்தனை அன்பின் பொலிவுகள்
சில நேரம் அங்காளி பங்காளிகளாய்
சிலநேரம் மாமன்மச்சானாய்
சிலநேரம் அன்னையாய்
சிலநேரம் தந்தையாய்
சிலநேரம் உறவுகளாய் இல்லாமல் நண்பனாய் என்னவென்று சொல்வதோ உனது அன்பு அம்புகளை!
உணர்வுகள் ஒன்று சேர்ந்தும் எழுத வார்த்தை சிக்கவில்லை
நட்பே உன்னைப்போற்றி லட்ச பாமாலைகள் வந்தாலும் நட்பே உனது அன்பிற்கு ஈடாகுமோ ?
உன்னைக்கண்டால் வேரெதும் எண்ண தோன்றவில்லை
உன்னோடு கை
கோர்த்து நடந்த தருணம்
அந்த பாதை இன்றும்
என் மனதில் அன்பின் வழியாய் உள்ளதே என் தோழனே
மீண்டும் அந்த தித்திக்கும் நினைவுகள் நினைவாகுமா ?
ஏக்கத்துடன் அனபுத்தோழமையோடு காத்துக்கிடக்கிறேன் என் அன்புத்தோழனே...........

எழுதியவர் : பிரகதி (6-Aug-18, 12:00 pm)
பார்வை : 668

மேலே