புதைந்த சிலை 11

சிறுமி கயல் உதவியோடும் அவள் அப்பா பாண்டி உதவியோடும் அதிகாரி மோகினி அடுத்த விசாரணையை ஆரம்பித்தார். யார் அந்த மூவர் என்று யோசித்துக்கொண்டே மீண்டும் காட்டுக்குள் சென்றார். ஜீப் சென்ற பாதையை தொடர்ந்து அடையாளம் மறைந்து விட்டது அந்த குழியை தோண்டுமாறு கட்டளையிட்டார்.
அவர் நினைத்து செய்தாரோ இல்லையோ சந்தேகத்தின் பார்வையால் அந்தக் குழியை தோண்டுமாறு செய்தார்களோ தெரியவில்லை வெகுநேரம் குழியைத் தோண்டி குழியில் எதுவும் கிடைக்கவில்லை இருந்தாலும் குழியைத் தோண்டுவது நிறுத்தவும் இல்லை அதிகாரி மிகவும் கடுமையாக குழப்பத்துடன் இருக்கையில் தோண்டுபவர்கள் நான்கைந்து பேர் மேலும் மேலும்
தோண்ட ஆரம்பித்தனர்.

அந்தக் குளத்தின் குழியில் சிலை கிடைத்தது.

ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். குழியில் சிலை எப்படி வந்திருக்கும் என்ற குழப்பத்தில் அதிகாரி மோகினி இருக்க, ஒரு சிலை மட்டும் கிடைக்கவில்லை . அந்தக் குழியில் அதிகாரி மோகினி எதிர்பார்க்காத அளவிற்கு நான்கைந்து சிலைகள் இருந்தது.
சிலை கிடைத்தது என அறிந்து ஊர் மக்கள் ஒன்று திரண்டனர்.
நான்கைந்து சிலைகள் எங்கு எப்படி வந்தது அதுவும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் இங்கு எப்படி வந்தது யார் இந்த குற்றவாளி எதற்காக இங்கு மறைத்து வைத்துள்ளார்.

பல கேள்விகள் அதிகாரி மோகினி இடம் தென்பட்டது.
பிறகு திருவிழா மறுநாள் என்ற வேலையில் சிலை கிடைத்துவிட்டது என ஊர் மக்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினார்.
திருவிழாவிற்கு அனைவரும் தயாரானார்கள். சிலை கிடைக்கும் ஊர் திருவிழா நடக்காதோ என பலரும் அஞ்சி இருக்கையில் அதிகாரி மோகினி தன் திறமையால் சிலையை கண்டறிந்தார் ஆனால் குற்றவாளிகள் கண்டறிய முடியவில்லை அதற்காக திருவிழா முடிந்ததும் அனைத்து விசாரணையும் ஆரம்பிப்பதாக அமைதியாக இருந்தார் அதிகாரியின் மோகினி.
திருவிழாவும் வெகு சிறப்பாக நடந்தது அனைத்து ஊர் மக்களும் கலந்து கொண்டனர் அதுமட்டுமில்லாமல் காவல்துறையினரின் பாதுகாப்புடன் சிலையும் பயன்படுத்தப்பட்டது.
நீதி சிலைகள் காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டது குற்றவாளியை கண்டு அறிந்து ஊடலை எங்கிருந்து எடுக்கப்பட்டது என கண்டறிந்து அங்கு ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
புதைந்து சிலை என்பதனால் அபிஷேகங்கள் ஆராதனைகள் எல்லாம் நடந்தன.
திருவிழாவில் மயிலாட்டம் பொம்மலாட்டம் என பாரம்பரிய நடனங்கள் இருந்தன. பத்து நாட்கள் சிறப்பாக திருவிழா அலங்காரம் அனைத்தும் ஆரவாரத்துடன் நடந்தது. அந்த காட்டை சுற்றி காவலர்களும் நியமிக்கப்பட்டனர்.
மேலும் என்ன செய்வது என்று அதிகாரி மோகினி யோசித்துக்கொண்டிருந்தார்..
திருவிழாவின் கொண்டாட்டத்தில் ஊர் மக்கள் திகைத்தனர் .சிலை கிடைத்துவிட்டது என்று பெரும் மகிழ்ச்சி கொண்டனர்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (6-Aug-18, 9:28 am)
சேர்த்தது : உமா
பார்வை : 101

மேலே