கலைஞரின் தலைமாட்டில் முதல் குழந்தை முரசொலி

என் முதல் குழந்தை முரசொலிதான் என்பார் கருணாநிதி.
தன் பிள்ளைக்கு போர்வாள் என்று பெயர் வைத்து, செல்லப்பெயராக முரசொலி என்று அழைத்தார். கருணாநிதிக்கும் முரசொலிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே போர்க்குணம் மிக்கது. மனதில் பட்டதை அப்பட்டமாக வெளிக்காட்டும் தன்மை உடையது. கலைஞர்தான் முரசொலி, முரசொலிதான் கலைஞர்.

தன் எண்ண சிதறல்களின் வெளிப்பாடுதான் முரசொலி. மனசாட்சியின் கண்ணாடிதான் முரசொலி. கலைஞர் சொல்லியதையும், எழுதியதையும் அப்படியே ஏற்று கோடி தொண்டர்களிடம் காலையில் முதல் வேலையாக ஒப்புவித்தது முரசொலி. ஆரம்பத்தில் துண்டறிக்கையாக வெளிவந்தது. அதுவும் ஒரு நல்ல தாளில் கூட அச்சிட முடியாத நிலை. பின்னர் படிப்படியாக இயந்திர வளர்ச்சி, கட்சி வளர்ச்சியினை அடுத்து மெருகேறியது.

வளர்ச்சிக்கு வித்து

முரசொலியில் கலைஞரின் தலையங்கம் திகட்டாத இனிமையை தந்தது... அதற்காக கருணாநிதி 4 மணிக்கே தூங்கி எழுந்து எழுதும் வழக்கம் இறுதிவரை மாறவில்லை. முரசொலியில் அவரது எழுத்துக்கள் லட்சக்கணக்கான இளைஞர்களின் ரத்தம் பீறிட்டு எழ செய்தது. தொண்டர்களை சோர்ந்திடாத வண்ணம் கருணாநிதியின் ஒவ்வொரு எழுத்தும் அவர்களை திமிறி நடை போட செய்தன. ஒவ்வொரு நாள் தலையங்கமும், கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டு அழைத்து சென்றது.

எதிரொலித்த முரசொலி

தன்னிடமிருந்த ஒட்டுமொத்த திறனையும், எழுத்தின் வலிமையையும், மொழியின் வளமையையும் முரசொலி மூலமாகே வெளிப்படுத்தினார் கருணாநிதி. அதனால்தான் தற்போதுவரை அவரை தலையை ஒட்டியே தந்த தந்தையை அவரின் எல்லா மெய்ப்பாடுகளையும் முரசொலி காலந்தோறும் எதிரொலித்தே வந்து கொண்டிருக்கிறது.

உடன்பிறப்பே....

திமு கழகத்தின் உள்ளடக்கத்தையும் கொள்கையையும் முரசொலி ஒருபோதும் விட்டுக் கொடுத்துவிடாமல் கவனித்தே பயணித்தது. அதனால்தான் திமுக மன்றங்களாகட்டும், படிப்பங்களாலும், தொண்டர்களாகட்டும் மணிக்கணக்கில் முரசொலிக்காக காத்திருந்து படிப்பார்கள். அதற்கு காரணம் முரசொலியின் மூலதன விதைவிருட்சமான கருணாநிதியின் எழுத்துக்கள்தான். ‘உடன் பிறப்பே' என விளித்து கருணாநிதி எழுதிய அந்த கடித வடிவத்திற்காகத்தான்.

சிந்தைக்கு விருந்து

வெளியூர் போனாலும் முரசொலியிடம் சொல்லிவிட்டுத்தான் போவார்,. யார் மீது எந்த விமர்சனம் வைத்தாலும் அதையும் முரசொலியிடம் தான் மனம்விட்டு சொல்வார். சொற்கோலங்களை தாங்கி வெளி வருவதை கண்டு மிரண்டனர் மக்கள்.. பலவித ரசங்களில் முரசொலி இதழை செம்மைப்படுத்தினார்... வளர்த்தெடுத்தார்... வார்த்தெடுத்தார்... கழகத் தொண்டனுக்கும் தலைவருக்கும் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொடுத்தது. சிந்தைக்கு நாள்தவறாமல் விருந்தளித்தது.

தனயன் அழுகிறானோ?

முரசொலி ஒரு வியாபார நோக்கமுடைய பத்திரிகை இல்லை. அது தலைவன்-தொண்டர்களிடையேயான உணர்வுள்ள உறவுப்பாலம். தொண்டர்களுக்கான கேடயம், ஒரு நீண்ட நெடிய வரலாற்றை தன்னுடன் அடக்கிய அந்த முரசொலி இன்று கருணாநிதியின் தலைக்கடியில் கண்ணீர் சிந்தி வருகிறது. தன் முதல் குழந்தை முரசொலி என்று அழைத்தால்தானோ என்னவோ, தந்தையின் தலைமாட்டிலேயே மகன் இப்போதும் தனயன் அழுது கொண்டிருக்கிறோனோ?

tamil.oneindia.

எழுதியவர் : (8-Aug-18, 12:00 pm)
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே