சத்வ குணபோதன் - ஜோன்புரி
1941 ல் வெளிவந்த அசோக்குமார் திரைப்படத்தில் பாபநாசம் சிவன் இயற்றி, ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்துப் பாடிய ஜோன்புரி ராகத்தில் அமைந்த ஒரு அருமையான பாடல் ’சத்வகுண போதன்’.
பல்லவி:
சத்வகுண போதன்.
சத்வகுண போதன்.
சத்வகுண போதன்
சரணமிருக்க.
சத்வகுண போதன்
சித்தமும் வீணே கலங்குவதேனோ
சத்வகுண போதன் (சித்தமும்)
சரணம்:
கல்லினுள் தேரைக்கும் ஆ
கல்லினுள் தேரைக்கும்
கருப்பை உயிர்க்கும்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்
சத்வகுண போதன்
புல்லுணவே தந்து போற்றும் நம் நாதன்
சத்வகுண போதன்
கண்ணிழந்தாலென்ன ஆ
கண்ணிழந்தாலென்ன
கடவுட்கும் என்ன
கண்ணிழந்தாலென்ன
கடவுட்கும் என்ன .
கண்ணிழந்தாலென்ன
கடவுட்கும் என்ன
கண்ணில்லையோ நம்மை
காக்கும் தயாளன்
சத்வகுண போதன்
கண்ணில்லையோ நம்மை
காக்கும் தயாளன்
சத்வகுண போதன் சத்வகுண போதன்
சத்வகுண போதன்
Sattva Guna Bodhan என்று யு ட்யூபில் பதிந்து எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடுவதைக் கேட்கலாம்.