உதிர்ந்த சூரியனே

மாலை பொழுதினில்
மறையச் சென்ற
உதய சூரியனே -- மறுபடியும்
எப்போது "நீ" உதயமாவாய்???

தன் மூச்சாக
தமிழை வளர்த்த தலைவனே!
இன்று
தமிழை மட்டும் துறந்து செல்கிறாயா???
இல்லை
இந்த தமிழகத்தையே மறந்து செல்கிறாயா??

உன் இதழினால்
உடன் பிறப்புக்களே என்று
உரக்க அழைத்த
அன்பு தலைவனே!
உனக்கு உறங்குவற்கு
உத்தரவு கொடுத்தது யாரோ????

காவியம் படைத்த
"கலைஞரே"
இன்று நாங்கள் கண்ணீர் வடிக்க
"நீ" ஏன் காரணமானாய்?????


மேடைப் பேச்சில்
மெய்சிலிர்க்க வைத்த
மேதையே!
எங்கள் மெய்யெல்லாம் இன்று
மெழுகாய் உருக
மெல்ல நீ உறங்கச் சென்றதை
எங்கள் உணர்வுகள் ஏற்குமா???

இரவினை இனிமையாக்க
நாடகம் எழுதிய நாயகனே!
இன்றைய நாடகத்தில் மட்டும் ஏன்
இமையை மூடிக்கொள்வதாக இறுதியை
வைத்தாய்????

கருப்பு கண்ணாடியும்
கைவிரல் பேணாவும்
ஓடி வந்து உன்னிடத்தில்
ஓய்வு கேட்கும் முன்பே!
"நீயாக தேடிச் சென்று
ஓய்வு கொடுத்தாய் என்பது
உண்மையில் உண்மையாகுமா???

இருக்கையில் அமர்ந்து வாழ்ந்த
நாட்களிலும் --- இலக்கியத்தை
படைத்த சிந்தனை சிற்பியே!
இனி எங்கு சென்று
"நீ" சிந்தனை செய்வாய்????

இருள் சூழ்ந்த திராவிடத்தில்
ஒளி பெருக
உதயமாக்கிய
உதய சூரியனே!
இன்று வந்துள்ள இருளை நாங்கள்
எந்த சூரியனால் விலக வைப்போம்???

தி.மு.க. வின் ஆணிவேரே
ஆயிரம் துணைவேர்கள்
அருகில் அமர்ந்தாலும் -- அரியனையில்
உன் வீரத்தினை
உன்னை தவிர வேறுயாராலும்
கொடுக்க இயலுமா????

ஐம்பது ஆண்டுகள்
அரசியல் நடைப்போட்ட
வரலாற்று நாயகரே!
உன் வரலாற்றினை இன்று இந்த
ஊரெல்லாம் உரைக்கும் வேளையில்
" நீ" உயிரை விடலாமா????

தொண்ணூற்று ஐந்து வரை
தமிழு(ழனு)க்கு தொண்டு செய்தவரே!
தொட முடியாத அளவிற்கு
"நீ" தொலைவில் சென்றது
நியாயமாகுமா???



திரைக்கதையின் திரையரங்கமே
வசனங்களின் வாக்கியமே
பாடல் வரிகளின் பக்குவமே
எழுத்துக்களின் ஏகாந்தமே
கருத்துக்களின் கடலலையே
முத்தமிழின் மூச்சுக் காற்றே
வாரஇதழ்களின் வரவேற்பே
கலையின் கலைஞரே
அன்னை தமிழின் அன்பரே
அரசியலின் அனுபவமே
பெரியாரின் பிரியா உறவே
அண்ணாவின் அருமை தம்பியே
மக்கள் திலகத்தின் மகத்தான நட்பே
திட்டங்களின் திங்களே
தரணி போற்றிய தலைவரே
சட்ட மன்றங்களின்சரித்திரமே


அதிகாலை உதயமாகும்
ஒவ்வொறு சூரியனும்
மறுநாள் காலையில்
மீண்டும் உதயமாகும் -- ஆனால்
இந்த மாலையில் உதிர்ந்த
இந்த சூரியன்
மீண்டும் என்று உதயமாகுமோ????

உதயமென்பது நீங்கி
உதிர்ந்த சூரியனே
உதயத்தில் "நீ" மறைந்தால் என்ன?
என்றும் இந்த தமிழத்தின்
இதயத்தில் "நீ" வாழ்வாய்.....

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (8-Aug-18, 12:30 pm)
பார்வை : 96

மேலே